(4) | ஐந்திரு ளறநீக்கி நான்கினுட் டுடைத்துத்தம் ஒன்றாற்றுப் படுத்தநின் னார்வலர் தொழுதேத்தி நின்புகழ் விரித்தனர் கிளக்குங்கா லவைநினக் கிறும்பூ தன்மைநற் கறிந்தே மாயினும் | 5 | நகுதலுந் தகுதியீங் கூங்குநிற் கிளப்பத் திருமணி திரைபா டவிந்த முந்நீர் வருமழை யிருஞ்சூன் மூன்றும் புரையு மாமெய் மாஅ மெய்யொடு முரணிய வுடுக்கையை நோனா ருயிரொடு முரணிய நேமியை | 10 | செயிர்தீர் செங்கட் செல்வநிற் புகழப் புகைந்த நெஞ்சிற் புலர்ந்த சாந்திற் பிருங்க லாதன் பலபல பிணிபட |
(பரி - ரை.) 1 - 2. செவிமுதலாயஇந்திரியம் ஐந்தையும் மயக்கமற நீக்கி மைத்திரிகருணை முதிதை இகழ்ச்சியென்னும் நான்கினாலும்சித்தத்தை மாசறுத்துத் தம்மைச் சமாதியாகிய ஒருநெறிக்கண்ணே படுத்திய நின் அன்பர். ஈண்டு ஐந்தென்றது ஐந்தன் காரியங்களை.ஐந்தையுமெனவும் நான்கினானுமெனவும் வந்த முற்றும்மைகள்செய்யுள் விகாரத்தால் தொக்கன. மைத்திரி முதலியநான்கும் சித்தத்தை அழகுசெய்தலின் அவற்றைவடநூலார் சித்த பரிகருமமென்ப. 3 - 5. அப்புகழ்களெல்லாம் நினக்குஇயல்பாவனவல்லது வியக்கப்படுவன அல்லாமையை அறிந்துவைத்தும்அத்தன்மையமல்லாத யாங்கள் அவற்றுட் சிலவற்றைஈங்கும் ஊங்குமாகப் பிறழக் கூறுவதற்கு நீ நகுதலும்எமக்கு ஒரு தகுதியாம்; அதனால் யாம் கிளத்தலும் ஒழிதற்பாற்றன்று. 6 - 7. திருமணியும் முந்நீரும் காலத்தின்கண்வரும்சூன்மேகமுமாகிய இம்மூன்றையு மொக்கும் கரியமேனி. அடுத்துவரலுவமை. திரைகிளர்ந்தவழி வெண்மையுடைமையின்''திரைபாடவிந்த'' என்றார். ''மழையிருஞ்சூல்'' என்பதனைமேல் ''தாமரைப்பொகுட்டு'' (3 : 94) என்றதுபோலக் கொள்க. 8. முரணுதல் - பொன்னிறத்ததாய்மாறுகோடல். 10. செயிர்தீர் செங்கண் - கோபத்தாலன்றிஇயல்பாகவே சிவந்தகண். 10-21. பிருங்கலாதன் நின்னைப்புகழ்தலாலே இரணியன் சினத் தீயாற் புகைந்த நெஞ்சொடும்புலர்ந்த சாந்தொடும் அவன் பலபல (பி - ம்.)10 ''நிற்புகழ்பு'' |