42

இந்திரன் தோல்வியுற்றான்; ஆதலால் இவ்வாற்றலுடையஇவனே நம் சேனைக்குத் தலைவன் என்று கருதி நினக்குஅக்கினி தேவன் கோழியைத் தந்தான். இந்திரன்மயிலையும் யமன் வெள்ளாட்டு மறியையும் தந்தனர்.அங்ஙனம் அவரும் பிறரும் தத்தம் மெய்யினின்றும்வாங்கிப் படையாகத் தந்த மறியும் மயிலும்கோழிச்சேவலும் வில்லும் மரனும் வாளும் ஈட்டியும்கோடரியும் மழுவும் கனலியும் மாலையும் மணியும் ஆகியஇவற்றைப் பன்னிரண்டு திருக்கரங்களிலும் கொண்டுஅத்தாமரையினின்றும் பெயராத அவ்விளமைப்பருவத்திலேயே தேவர் சேனைக்குத் தலைவனாயினை;அதனால் அவர்களுக்கு அரசனாகிய இந்திரனது புகழ்வரம்பைக்கடந்தோய்! உருள்கின்ற பூங்கொத்தையுடைய கடப்பமலர்மாலையையணிந்தோய்! உயிர்களைச் செறுகின்ற தீயநெஞ்சத்திற்சினத்தை உடையோரும் அறத்தின்கண் சேராதபுகழில்லோரும் கூடாவொழுக்கத்தால் அழிந்ந தவவிரதத்தினரும்''இப்பிறப்பின் நுகர்ச்சியே உண்மை; மறுபிறப்பு இல்லை''என்னும் மடவோருமாகிய இவர்கள் நின்தாள் நிழலைஅடையார். நினது குணத்தை ஏற்றுக்கொண்டாராகியஅறங்கொண்டோரும் வீடுபெறும் குணமுடையோராகிய மாதவரால்வணங்கப்பட்டோரும் நின் தாள் நிழலை அடைவர்;ஆதலால் நின்னை யாம் இரந்து வேண்டுவன நுகர்பொருள்களும்அவற்றைப் பெறுதற்குக் காரணமாகிய பொன்னும் அவ்விரண்டாலும்நுகரும் நுகர்ச்சியுமல்ல; எமக்கு வீடு பயக்கும் நின்அருளும் அதனைப்பெற நின்னிடத்தே செய்யும் அன்பும்அவ்விரண்டாலும் வரும் அறமுமாகிய இம்மூன்றையுமே வேண்டுகின்றேம்;அருள்புரிவாயாக.

(5)1பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச்
சேயுயர் பிணிமுக மூர்ந்தம ருழக்கித்

(பரி - ரை.)1. பரந்த கரியகுளிர்ச்சியையுடைய கடலை இடையிற் பாறைகள்பிதிர்ந்து துகள்படப் புக்கு.

2. சேயுயர் - மிக உயர்ந்த. பிணிமுகம்- முருகற்குரித்தாகிய யானை.

1 இறைவன் உமையை வதுவை செய்துகொண்டநாளிலே இந்திரன் சென்று நீ புணர்ச்சி தவிர வேண்டுமென்றுவேண்டிக்கொள்ள அவனும் அதற்கு உடம்பட்டு அது தப்பானாகிப்புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற்கொடுப்ப அதனை இருடிகள்