(6) | நிறைகடன் முகந்துராய் நிறைந்துநீர் துளும்புந்தம் பொறைதவிர் பசைவிடப் பொழிந்தன்று வானம் நிலமறை வதுபோன் மலிர்புன றலைத்தலைஇ மலைய வினங்கலங்க மலைய மயிலகவ | 5 | மலைமாசு கழியக் கதழுமருவி யிழியும் மலிநீ ரதர்பல கெழுவு தாழ்வரை மாசில் பனுவற் புலவர் புகழ்பல நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை மேவிப் பரந்து விரைந்து வினைநந்தத் | 10 | தாயிற்றே தண்ணம் புனல்; புகைபூ அவியா ராதனை யழல்பல வேந்தி |
(பரி - ரை.)1. உராய் - பரந்து. 1 - 2. நீர் நிறைதலால் துளும்பும்தம் பாரந் தீர்ந்து இளைப்பாற. 3. ஊழிக்கண் நிலமறையும் வெள்ளம்போலே வெள்ளம் மேலே பரக்க. 4. இனம் - மானினம் முதலாயின. 5 - 6. விரையும் அருவியாய் வீழ்கின்றமிக்கநீர் வரும்வழிகள் பல பொருந்தின சாரல். 7 - 10. புகழப்படும் அறிவினையுடையநாவாற் புலவர் பாடிய நன் செய்யுள் பொய்யாகாமல்நாட்ட விரைந்து எங்கும் பரந்து உழவு முதற்றொழில்கள்பெருக. 8. கவிதை - கவியதுதன்மை. அஃது ஈண்டுச்செய்யுண்மேல் நின்றது. வானம் (2) முகந்து உராய்த்தம் (1)பொறைதவிர்ந்து இளைப்பாறவும் (2) நிலத்தின்மேலேவெள்ளம் பரக்கவும் (3) பொழிந்தது; (2) பொழியமலைச்சாரலில் (6) தண்ணம்புனல் (10) மேவிப் பரந்துநந்தத் (9) தாயிற்று (10) எனக்கூட்டுக. 11 - 3. புனலாடு மகளிர் தமக்கு ஈரம்புலரப் புகைக்கப்படும் அகின் மரமுதலாயினவும் அவைபுகைத்தற்கு அழலும் சூடுதற்குப் பூவும் வையைக்கு ஆராதனைப்பொருளாகிய அவியும் பொன்மீன் முதலிய பலவு மேந்தித்தம் மகிழ்ச்சி பொருந்திய காதலரை நாளணியொடுகூடப்பண்ணும் வகை மிக்கது வையை வரவின்கண். 11. ஈண்டுப் புகையென்பதூஉம் ஆராதனையென்பதூஉம்ஆகுபெயர். (பி - ம்.)3 ''மலிபுனறலைக்கலைய''5 ''மருவிபொழியும்'' 6 ''மலிகதிர்பல''; ''தாலவரை'' 11''புகையூ'' ''வேந்திய'' |