69

கண் நீர்விழவை அநுபவிப்பவர்களுடைய மாலைகளைப்பெற்றுப் புனைகின்ற வையையே! இன்றுநின்பால் மூழ்கி இத்தகைய பயனைப் பெற்றாற்போலயாம் என்றும் பயன் பெற்று நின்னைப் பாராட்டித்துன்பம் நீங்கி இன்புறுவேமாக.

(7)திரையிரும் பனிப்பௌவஞ் செவ்விதா வறமுகந்
துரவுரு முடன்றார்ப்ப வூர்பொறை கொள்ளாது
கரையுடை குளமெனக் கழன்றுவான் வயிறழிபு
வரைவரை தொடுத்த வயங்குவெள் ளருவி
5இரவிருள் பகலாக விடமரிது செலவென்னாது
வலனிரங்கு முரசிற் றென்னவ ருள்ளிய
நிலனுற நிமிர்தானை நெடுநிரை நிவப்பன்ன
பெயலாற் பொலிந்து பெரும்புனல் பலநந்த
நலனந்த நாடணி நந்தப் புலனந்த
10வந்தன்று வையைப் புனல்;
நளியிருஞ் சோலை நரந்தந் தாஅய்

(பரி - ரை.)1 - 10. திரையையும்குளிர்ச்சியையுமுடைய கரிய கடலை நேராக வற்ற முகந்துவலிய உருமேறு வெகுண்டார்ப்பத் தன்மேலேறின பாரத்தைபொறுக்கமாட்டாது கரையுடைந்த குளத்து நீர்கழலுமாறுபோல அப்பாரம் கழல மேகம் வயிறழிதலாற்சயிலத்திற் (பி - ம். சையத்திற்) சிகரந்தோறுந்தொடுத்த அருவிநீர் பெயலாற் பொலிந்து மற்றையிடங்களிற்சேரும் புனல்பலவற்றோடுங் கூடிப்பெருகுதலால் வையைப்புனல்உயிர்கட்கு நன்மை மிக மென்புலங்கள் அழகு பெற வன்புலங்கள்விளைய வந்தது.

5 - 7. வெற்றியுண்டாக ஒலிக்கும்முரசினையுடைய தென்னவர்

கொள்ளக்கருதிய நாட்டையுறநிமிரும் அவர்தானையது நெடுநிரையின் நிமிர்ச்சியொக்கயாம்செல்லுமிடம் அரிதென்னாது இருளையுடைய இரவும்பகலாக வந்ததெனக் கூட்டுக.

11. நளி - செறிவு.

11 - 4. நரந்தப்புல்லின்கட் பரந்துவேங்கையது இணரினின்று உதிர்ந்த பூவோடு கூடி மழையால்ஏறுண்ட கிட்டுதற்கரிய மலையுச்சிகள் தோறுமுளவாய்க்காற்றான் அலையுங் கொம்புகளையுடைய பெரிய மரங்களைவேர் அகழ்ந்தது.

(பி - ம்.)6 ''வலனீங்கு'' 7 ''நிரப்பன்ன'''நிமிர்ப்பன்ன''