80

உடையவரும் சுனையின்கண் பாய்ந்து எழுபவருமாகியமகளிருடைய பூணோடு அவருடைய கணவர் பூண்களும் மயங்கின.மகளிரால் உண்டாக்கப்பட்ட காமபானத்தையும்மடைத்தொழில் புரிவோரால் சமைக்கப்பட்ட உணவையும்அம்மகளிருக்குக் கொடுக்க அவற்றை உண்டு அவர்கள்தம் கணவரால் வந்த சோர்வினின்றும் நீங்குவார்.

பரங்குன்றமே! இங்ஙனம் பிரியாதமகளிரும் மைந்தரும் இவரை யல்லாத வரம்வேண்டுவாரும்கூடி நீலகண்டப் பெருமானுக்கும் உமாதேவியாருக்கும்திருக்குமரனாகிய கடம்பமர் செல்வன்திருக்கோயிலை வழிபட்டு நிற்ப மண்ணகம்வருந்தும்படி மழை அற்றுப் போயினும் அருவியானது நீர்மிக்கிருக்கும் செல்வம் நினக்கு நிலைபெற்றிருப்பதாக.

(8)மண்மிசை யவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புண்மிசைக் கொடியோனும் புங்கவ மூர்வோனும்
மலர்மிசை முதல்வனு மற்றவ னிடைத்தோன்றி
உலகிரு ளகற்றிய பதின்மரு மிருவரும்
5மருந்துரை யிருவருந் திருந்துநூ லெண்மரும்
ஆதிரை முதல்வனிற் கிளந்த
நாதர்பன் னொருவரு நன்றிசை காப்போரும்
யாவரும் பிறரு மமரரு மவுணரும்
மேவரு முதுமொழி விழுத்தவ முதல்வரும்

(பரி-ரை.)1-2. மலர்ந்ததுழாய்மாலையையும் அளவற்ற செல்வத்தினையுமுடையபுள்ளை மேலே எழுதப்பட்ட கொடியோனும்.

2. புங்கவம் - ஏறு. 4. உலகின்கண்இருள்.

7. நல்லதிசையைக்காப்போர் - இந்திரன்முதலிய எண்மர்.

6-7. ஆதிரைமுதல்வன் பெயராற் சொல்லப்பட்டநாதர் - உருத்திரர்.

4-7. ஆதித்தர் முதலாக உருத்திரரீறாகமுப்பத்து மூவரையுங் கூறினார்.

8. இவரெல்லாரும் இவரொழிந்தபிறருமாகிய அமரரும் அவுணரும்.

9. அதிகரித்தற்கரிய வேதத்தினைஅதிகரித்த விழுத்தவ முதல்வர்- தெய்வமுனிகள்.