நீ நினக்குப் பொருந்தியவேலினையுடையை; வெற்றிபெற்று உயரப்பறக்கவிட்டகொடியினால் விறல்பொருந்தினை; கற்புப்பொருந்திய நெறியையுடைய தேவியரது அன்புபொருந்திய ஊடலுரிமையை விரும்புகின்ற பண்பையுடையகுமர! அன்புடைய யாம் நின் திருவடிக்கண் உறையும்செயல் நாள்தோறும் வளர்ச்சியுற்றுப் பயன் தந்துசிறக்கவென்று நின்னைத் தலைவணங்கி வாழ்த்திவேண்டுகின்றேம்; அருள் புரிவாயாக!
(9) | இருநிலந் துளங்காமை வடவயி னிவந்தோங்கி அருநிலை யுயர்தெய்வத் தணங்குசா றலைகாக்கும் உருமுச்சூழ் சேட்சிமை யுயர்ந்தவ ருடமபட எரிமலர்த் தாமரை யிறைவீழ்த்த பெருவாரி |
5 | விரிசடைப் பொறையூழ்த்து விழுநிகர்மலரேய்ப்பத் தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய்நீ மையிருநூற்றிமையுண்கண் மான்மறிதோண்மணந்தஞான் |
(பரி - ரை.) 1-11. பெரியநிலம்அசையாமல் வடதிசைக்கண்ணே மிக ஓங்கிஅணங்குதல்சான்ற தெய்வசாதிக்கு இறையாகியஇந்திரனாற் காக்கப்படும்இமயச்சிமையத்தின்கண் தெய்வமுனிவர் அறுவரும்உடம்படக் கற்பால் நன்கு மதிக்கப்படும்ஆரலிடத்தே மணிமிடற்றண்ணற்குப் பிறந்தோய்!மையாகிய கரிய நூற்றான் அணியப்பட்ட இமைக்குங்கண்ணையுடைய வள்ளிதோளை நீ களவின்கண் மணந்தஅன்று மெய்யின்கண் ஆயிரம் கண்ணையுடையஇந்திரன்மகள் தேவசேனையது கண் முதுவேனில்காராந்தன்மைபெற மணிநிற மழைபெய்தாலொக்கப்பரங்குன்றின்கண் நீராகிய தணிந்த மழையைப்பெய்தது.
4-8. அயனால் வீழ்த்தப்பட்டஆகாயகங்கையை மலர்ந்துவிழும் பூவையொப்பவேகந்தணியச் சடைப்பாரத்தின்கட்டாங்கியஒப்பில்லாத நிலைமையினையுடைய சலதாரியாகியமணிமிடற்றண்ணலெனக் கூட்டுக.
6. சலதாரி - சலத்தைத் தரிக்கும்இயல்பையுடைவன்.
8. வள்ளியை ''இமையுண்கண் மான்மறி''என்றார் மானுடை மகள் (பி-ம்.மானுடமகள்மானிடமகள்) ஆகலின்
__________________
(பி - ம்.) 2. ''அகனிலையுயர்''''தணங்குகாறலை'' 4 ''வீழத்த முருகு பெருவாரி