பக்கம் எண் :

மூன்றாவது மருதம்571

பிடத்தே சென்று புல்லுவேனாயின் என்னுடைய நெஞ்சிலே அக்கூன் ஊன்றும்; முதுகிலேபுல்லுவேனாயின்முதுகிற் 1கூன் (1) அக்குளுக்காட்டுதலை உடைத்து; ஆதலால், கூடுதலேயன்றி முயங்குதலையுஞ் செய்யமாட்டேன்; இனிப் பக்கத்தே சிறிது முயங்கும்படியாக வருவாயாகவென்றான். எ - று.

நடுவுயர்ந்தென்றது “நோன் 2புயர்ந்தது” என்றாற்போல நின்றது.

22 (2) 3போ (3) சீத்தை

எ - து: அதுகேட்ட கூனி, சீ ! கெட்டதன்மையையுடையவனே! நீ எம்மிடத்தினின்றும் போவென்றாள். எ - று.

மக்கண் (4) முரியேநீ மாறினித் தொக்க
மரக்கோட்டஞ்சேர்ந்தெழுந்த பூங்கொடி போல
நிரப்பமில் யாக்கை 4தழீஇயின ரெம்மைப்
புரப்பேமென் பாரும் பலராற்பரத்தையென்
பக்கத்துப் புல்லீயா யென்னுமாற் றொக்க

1. அக்குளுக்காட்டுதல் - கக்கமுதலிய உறுப்பில் தீண்டிக் கூச்சமுண்டாக்குதல்; இஃது, அக்குளுப்பாய்ச்சுதலெனவும் வழங்கும்; இப்பொருளில் இக்காலத்து, கிச்சுக்கிச்சுமூட்டுத லென்னும்சொல், பெருவழக்காக உள்ளது.

2. உயர்திணை அஃறிணையாய்ச் செறலின்கட் டிணைமயங்கிவந்ததற்கு, ‘பொய்ச் சீத்தை வந்தது; போயிற்று’ என இ - வி. சூ. 299- இல், ஒருமேற்கோள் காணப்படுகின்றது; செய்யு ளின்பத்துக்கும் அதுவே சிறந்ததாக வுள்ளது. அவ்வாறு பிரதிபேதமுமுள்ளது; அந்தப் பிரதியிலுள்ள உரையும் போசீத்தை யென்னுமூலத்திற்கே பொருந்துகின்றது.

3. (அ) சீத்தையென்பதற்கு, இங்குப்போலவே கலி. 84: 18-இல் கைவிடப்படுமவனென்றும் கலி. 86: 30-இல் கைவிடப்பட்டவ னென்றும் ஆண்பாலாகப் பொருள் கூறப்பட்டிருக்கிறது; (ஆ) “குரவன் மேலவ னாயினுங் குணமிழி சீத்தை, விரவு சீடனாய் விடினவன் கெடுவது மெய்யே” எனப் பிற்காலத்து நூலிலும் ஆண்பாற் பெயராக வந்துள்ளது; கலி. 96: 29 -இல் இச்சொல்லுக்கு, ‘சீ கெட்டது’ என்று பொருள் கூறப்படுகிறது; இது செறற்சொலென்பது இதற்கு முந்தின குறிப்பால் விளங்கும்.

4. பிரிதலென்பது பிறிதலென்று வருவதுபோல, முரிதலென்பது முறித லென்றும் வரும்; இதற்கு முதனிலையாகிய முறியென்பது பாதியென்னும் பொருளில் வருதலை, “இந்து முறி” என்னும் நளவெண்பா வாலும் அறிக.

(பிரதிபேதம்)1கூனனுக்குளுக்காட்டுதலை, 2உயர்ந்தென்றாற்போலே, 3பொய்ச்சீத்தை, 4தழீஇயரெம்மைப்புரப்பமென்பாரும்.