பக்கம் எண் :

572கலித்தொகை

(1)வுழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னி
னிழிந்ததோகூனின் பிறப்பு

எ - து: அது 1கேட்டு அவன் அணுகுதலின், மக்களிற் பாதியானவனே! இனி நீ இந்நிலையைக் கைவிடென்று கூறி, பின்னர்த் திரண்ட மரத்தின் வளைவான இடத்தை விட்டு நீங்காமற் பற்றிவளர்ந்த பூங்கொடிபோலே எம் முடைய கூனால் வடிவொத்தலில்லாத யாக்கையை முயங்கி எம்மைப் பாது காப்பேமென்று கூறுவாரும் பலராயிருக்கும்; (2) இப்பரத்தைமையையுடைய வன் 2பக்கத்துப் புல்லுதலைத் தாராயென்று கூறாநிற்குமால்; இங்ஙனங் கூற நமக்கு உண்டாகிய குறை யாதுதா னென அவன் கேட்பத் தன்னெஞ் சொடுகூறி, குறிய வட்டின்றன்மையையுடையாய் ! பலவுங்கூடின உழுத்தம் பணியாரத்தினுங் காட்டில் (3) துய்க்கப்பட்டிருக்கின்ற கூன்சாதியினுடைய பிறப்பு 3நின்னிற் றாழ்ந்ததோவென்றாள். எ - று.

கழிந்தாங்கே
யாம்வீழ்து மென்று 4தன் பின்செலவு முற்றீயாக்
கூனிகுழை யுங்குழைவு காண்

எ - து: அதுகேட்ட குறளன், யாம் நின்னை விரும்புவேமென்று கூறித் தன்பின்னே செல்லுதல் செய்தேயும் அதற்கு மனம்பொருந்தாத கூனி நம் அருகுநின்றும் அவ்விடத்தே போய் நுடங்கும் நுடக்கத்தை நெஞ்சே பாராயென அவள் கேட்பக் கூறினான். எ - று.

உற்றீயா, பெயரெச்சமறைத்திரிசொல்.
31 யாமை யெடுத்து நிறுத்தற்றாற் றோளிரண்டும் வீசி
யாம்வேண்ே்ட மென்று விலக்கவு மெம்வீழுங்
5காமர் நடக்கு நடைகாண் (4) கவர்கணைச்
சாமனார் தம்முன் செலவு 6காண்க

1. “உழுந்தினும்.....................பிறப்பு” என்பது ஒப்பின் வகை பத்தனுள், பிறப்புவகையின் பாற்படுமென்பர். பேர்; தொல். மெய்ப். சூ. 25.

2. பரத்தை யென்பது பேதை யென்பதுபோல உயர்திணை யொருமை யிரண்டிலும் வரும்போலும். கிடைத்த பிரதிகளிலெல்லாம் ‘பரத்தை யென்’ என்றே உள்ளது.

3. ‘துயக்கப்பட்டிருக்கின்ற’ என்றும் படிக்கலாம்; ‘இருக்கின்ற’ என்பது வருவித்தது போலும்.

4. (அ) “கடுந்தொடைக் கவர்கணைக்காமன்” சீவக. 1218. (ஆ) “கவர்கணை நோன்சிலைக் காமனிவனெனு, மையலுள்ளமொடு” பெருங். (2) 15:

(பிரதிபேதம்)1கேட்டதலைவனுகுதலின், 2பக்கத்தைப் புல்லுதலை, 3நின்னாற், 4தம்பின் செலவு, 5காமிநடக்கு நடைகாண்க வார்கனை, 6காண் என்பது.