பக்கம் எண் :

180அகநானூறு

காதலொடு -அமையாத விருப்புடன், தார் இடைக்குழையாது-தங்கள் தாரை இடையே குழையச் செய்யாதே, சென்று படு விறல் கவின் உள்ளி - சென்றொழிந்த மிக்க அழகினை நினைத்து, என்றும் இரங்குநர் அல்லது - என்றும் இரங்குவாராவரே யவ்வலாத, இவ்வுலகத்தான் பெயர்தந்து யாவரும் தருநரும் உளரோ என - இவ்வுலகத்தே பெயர்த்து அவ்வழகினைத் தருவார் எவரேனும் உளராவரோ என்று இங்ஙனம், புலந்து பல வறி - வெறுத்துப் பலவும் கூறி, ஆனா நோயை ஆக - அமையாத நோயுடையை அகவும், யான் - நான், அரிது பெறு சிறப்பின் நின் வயினாள் - அரிதாகப் பெற்ற சிறப்பினையுடைய நின்னிடத்தினின்றும், பிரியச் சூழ்தலும் உண்டோ. பிரியுமாறு கருது தலும் உளதோ? இல்லையாகும்.

(முடிபு) குறுமகளே! நீ, ஆடவர் பொருளல் காட்சியின் உள்ளமொடு துஞ்சல் செல்லாது, கன்னெறிப் படர்குவராயின், சென்றுபடு விறற்கவின் உள்ளி இரங்குநர் அல்லது பெயர்தந்து தருநரும் உளரோ எனப் புலந்து பல கூறி ஆனா நோயை யாக, யான் நின்வயின் பிரியச் சூழ்தலு முண்டா. (சூழேன்.)

(வி - ரை.) ஆள்வினை - பொருளீட்டும் முயற்சி; அருள் பொருளன்றாக, ஆள்வினையே பொருளாக வலித்த என்க. 1'ஆங்கவை யொருபாலாக’ என்னுஞ் சூத்திரத்து, ‘அருளல் என்பது, மக்கள் முதலிய சுற்றத்தாரை அருளல்’ என்றார் பேராசிரியர். பிரிவினால் தனக்க ரும் ஏதங் குறித்து இரங்காமையின், அருளன்றாக எனத் தலைவி வறினாள். இக் கருத்து, பொருளே காதலர் காதல், அருளே காதலர் என்றி நீயே (53) என முன்னர் இந்நூலுள்ளும், 2'பொருளே மன்ற பொருளே, அருளே மன்ற வாருமில் லதுவே’ எனக் குறுந் தொகையுள்ளும் வந்துள்ளமையுங் காண்க. சினம் - நெருப்பு: ஆகு பெயர். கரிபுகு என்னும் எச்சம் கரிகு என விகாரப்பட்டது. கரிந்த குதிர் போலும் என்றுமாம். ‘தாரிடைக் குழையாது’ என்பது இடக் கரடக்கு. ‘அவரே பிரியச் சூழ்தலும்’ என்றும் பாடம் உளது. இதற்குத் தலைவர் நின்னைப் பிரியக் கருதலும் உண்டோ வென்று தோழி சொல்லியதாக உரைக்க. இதற்கேற்பக், கருத்தினும், தலைமகட்குப் பிரியாரெனத் தோழி சொல்லியது என்ற பாடமும் உளது. அக நனூற்றுக் குறிப்புரையாசிரியர், யானே பிரியச் சூழ்தலும் உண்டோ என்ற பாடத்திற்கே, ‘நின்னிடத்தினின்றம் அவர் பிரிய அவரொடு யான் விசாரிப்பதுண்டோ’ எனத் தோழி கூற்றாக்கி வலிந்து பொருள் கூறியுள்ளார்.


1. தொல். மெய்ப்: 12.

(பாடம்) 2. குறுந்: 174.