76. மருதம் [தலைமகனை நயப்பித்துக்கொண்டா ளென்று கழறக் கேட்ட பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.] | மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத் தண்டுறை ஊரனெம் சேரி வந்தென இன்கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு நன்கலன் ஈயும் நாண்மகிழ் இருக்கை | | 5. | அவைபுகு பொருநர் பறையின் அனாது கழறுப என்பவவன் பெண்டிர் அந்தில் கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன் வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல் சுரியலம் பொருநனைக் 1காண்டி ரோவென | | 10. | ஆதி மந்தி பேதுற் றினையச் சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகும் அந்தண் காவிரி போலக் கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின் யானே. | | -பரணர். |
(சொ - ள்.) 1-2. மண் கனை முழவொடு மகிழ்மிகத் தூங்க - மார்ச்சனை செறிந்த மத்தளத்தொடு (காண்பார்க்கு) மகிழ்ச்சி மிக (யாங்கள்) கூத்தாட, தண்துறை ஊரன் எங்ம சேரி வந்தென்-தண்ணிய நீர்த்துறையையுடைய ஊரன் எம் சேரிக்கண் அதனைக் காண வந்தனனாக (அவ்வளவிற்கே); 3-6. அவன் பெண்டிர்-அவன் பெண்டிர், இன் கடுங் கள்ளின் அஃதை - இனிய கடிய கள்ளினையுடைய அஃதை என்பானது, களிற் றொடு நன்கலன் ஈயும் நாண்மகிழிருக்கை - யானைகளையும் நல்ல அணிகளையும் (பரிசிலர்க்கு) வழங்கும் மகிழ்ச்சி பொருந்திய நாளோலக் கத்தையுடைய, அவை புகு பொருநர் பறையின் - அவையிற் புகும் பொருநரது பறையைப்போல, ஆனாது கழறுப என்ப-ஒழியாது என்னை இகழவர் என்று கூறுவர்; 7-13. கச்சினன் காலினன் தேம் தார் மார்பினன் - கச்சினையும் கழலினையும் தேனொழுகும் தாரணிந்த மார்பினையும் உடையவனும், வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் - கூறுபாட்டின் அமைதியோடு விளங்கிய அழகு அமைந்த மாலையை யுடையவனும் ஆகிய, சுரியல் அம் பொருநனை - குழன்ற மயிரினையுடைய அழகிய
(பாடம்) 1. காணீரோ. |