பக்கம் எண் :

களிற்றியானை நிரை19

பூக்களால் தொடுத்த செங்கழுநீர் மாலையை மோந்து பெருமூச்சு எய்ிய காலத்தே, மாமலர் மணி உரு இழந்த அணி அழி தோற்றம் கண்டு - அச் சிறந்த மலர் பவளம் போலும் உருவினை யிழந்த பொலிவற்ற காட்சியைக் கண்டு, கடிந்தனம் செலவே - போதலைத் தவிர்ந்தோ மன்றோ;

26-28. ஒண் தொடி உழையம் ஆகவும் இனைவோள் பிரிதும் நாம் எனினே பிழையலள் - ஒள்ளிய தொடியினளான இவள் நாம் அண்மையில் இருக்கவும் அவ்வாறு வருந்து இயல்பினள் பிரிவோ மாயின் உயிர் உய்ந்திராள். (ஆகலின் நாம் செல்லுமாறு எங்ஙனம்?)

(முடிபு) ஒண்ணுதல் அளி நிலை பொறாது அமரிய முகத்தளாய், செல்லா நினைவுடன். கானம் இறப்ப எண்ணுதிராயின், கிளவி அன்னவாக என்னுநள்போல முகத்திற் காட்டி, ஒன்று நினைந்தேற்றி, புதல்வன் புன்றலைப் பிணையல் மோயினள் உயிர்த்த காலை, அணி யழி தோற்றம் கண்டு நாம் பிரிதும் எனின் பிழையலன் என்று செலவு கடிந்தனம்.

முகந்தள் கேளாள் வந்து முறுவலள் உணரா அளவை செல்லாநினைவுடன் எனவும் காட்டு நெல்லி பாறை படூஉம் கவான் கூர்ங்கல் சிதைக்கும் அதர கானம் எனவும் கூட்டுக.

(வி - ரை.) அளிநிலை பொறாமையை, “முள்ளுறழ் முளையெயிற் றமிழ் தூறுந் தீநீரைக், கள்ளினு மகிழ்செயு மெனவுரைந்து மமை யாரென், னொள்ளிழை திருத்துவர் காதலர் மற்றவர், உள்ளுவதெவன்கொ லறியே னென்னும்”1 என்பது முதலியவற்றால் அறிக. “பிரிவஞ்சும் புன்க ணுடைத்தாற் புணர்வு”2 என்புழிப் பரிமேலழகரும் பிரிவச்சத்திற்கு இக் கலியின் பகுதியை எடுத்துக் காட்டினர். கொளா - கொண்டு; இதனைக் கொள்ள வெனத் திரிக்க; கொள்ள வென்றே பாடங் கோடலுமாம். வறிது-சிறிது; உரிச்சொல். வாய்மையற்ற நகையாத உள்ளத்தொடு பொருந்தாத நகை. முதையலங்காடு என்பதில் அம்மும், பளிங்கத்தன்ன என்பதில் அத்து சாரியைகள். அறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி என்பதற்கு, காதலுடையாரைப் பிரிதல் அறநெறி யன்றாகலின், நின்னைப் பிரியேன் என்று, இயற்கைப் புணர்ச்சிக் காலத்து நீவிர் கூறிய சொல் என விரித்துரைத்துக் கொள்க. ஏற்றி - ஏற்றம் என்னும் உரியடியாகப் பிறந்த வினையெச்சம்; ‘கானலஞ் சேர்ப்பன் கொடுமையேற்றி’3 என்பது காண்க; எற்றி எனப் பாடங் கொள்வாரும் உளர். மோயினள் வினையெச்சமுற்று; ‘வினையெஞ்சு கிளவியும் றேு பல்குறிய’4 என்னும் சூத்திர உரையில், சேனாவரையர் மோயினள் என்பதற்கு வினை யெச்சம் முற்றுச் சொல்லது திரிபாய் வந்ததென்றும், நச்சினார்க்


1. கலி. பாலை 3.

2. குறள்: 1152.

3. குறுந்: 145.

4. தொல். எச்:51.