பக்கம் எண் :

20அகநானூறு

கினியர் வினையெச்சப் படர்க்கைத் தெரிநிலை முற்று என்றும் இக்கணம் கூறினர். மணி - ஈண்டுப் பவளம். கடிந்தனம் செலவு என்றது பண்டொருகால் போக்கு ஒழிந்ததனைக் குறித்தது. இது, “செலவிடையழுங்கல் செல்லாமையன்றே, வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும்”1 என்னும் விதியால் வற்பறுத்திப் பிரிதற்குத் தலைவன் செலவழுங்கியதாம் என்க.

(மே - ள்.) ‘கரணத்தி னமைந்து’2 என்னும் சூத்திர வுரையில் ‘கை விடின் அச்சமும்’ என்பதற்கு இளம்பூரணர் இச் செய்யுளை எடுத்துக் காட்டினர். ‘செலவிடை யழுங்கல்’3 என்னும் சூத்திர வுரையில், ‘மணியுரு...பிரிது நாமெனினே’ என்னும் பகுதியைப் பேராசிரியர் எடுத்துக்காட்டி, இது வன்வுறை குறித்துச் செலவழுங்குதலிற் பாலையாயிற்று என்றார்.

6. மருதம்

[பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது.]

 அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை
அரம்போ ழவ்வளைப் பொலிந்த முன்கை
இழையணி பணைத்தோ ளையை தந்தை
மழைவளந் தரூஉ மாவண் தித்தன்
5.பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண்
கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தங்
குழைமாண் ஒள்ளிழை நீவெய் யோளொடு
வேழ வெண்புணை தழீஇப் பூழியர்
கயநா டியானையின் முகனமர்ந் தாஅங்
10.கேந்தெழில் ஆகத்து பூந்தார் குழைய
நெருநல் ஆடினை புனலே இன்றுவந்
தாக வனமுலை யரும்பிய சுணங்கின்
மாசில் கற்பின் புதல்வன் தாயென
மாயப் பொய்ம்மொழ சாயினை பயிற்றியெம்
15.முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல
சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்
தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கி

1. தொல். கற்பு: 44.

2. தொல். கற்பு: 5.

3. தொல். கற்பு:44.