பக்கம் எண் :

களிற்றியானை நிரை21

 வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்
முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும்
20.பல்வேன் மத்தி கழாஅ ரன்னவெம்
இளமை சென்று தவத்தொல் லஃதே
இனிமையெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே.
 

- பரணர்.

(சொ - ள்.) 1-6. அரி பெய் சிலம்பின் - பரல்கள் இடப் பெற்ற சிலம்பினையும், ஆம்பல் அம் தொடலை - ஆம்பல் மலராலாகிய அழகிய மாலையினையும், அரம் போழ் அவ்வளை பொலிந்த முன்கை - அரத்தாற் பிளக்கப்பெற்ற அழகிய வளைகளாற் பொலிந்த முன்கையினையும், இழை அணி பணை தோள் - அணிகலன் அணிந்த மூங்கிலை யொத்த தோளினையும் உடைய, ஐயை தந்தை-ஐயை என்பாளுக்குத் தந்தையாகிய, மழைவளம் தரும் மாவண் தித்தன்-மழைவளம் போலத் தரும் பெரிய வண்மையையுடைய தித்தனது, பிண்டம் நெல்லின் உறந்தை ஆங்கண் - நெற் குவியல்களையுடைய உறையூராய அவ்விடத்தே, கழை நிலை பெறாக் காவிரி நீத்தம் - ஒடக்கோலும் நிலைத்த வில்லாத காவிரியின் நீர்ப் பெருக்கில்,

7-11. குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு - குழை முதலாகிய மாண்புறும் ஒளி பொருந்திய அணிகளையுடைய நின்னால் விரும்பப்பட்ட பரத்தையொடு, வேழம் வெண்புணை தழீஇ - வேழக் கரும்பாலாகிய வெள்ளிய தெப்பத்தினைக் கொண்டு, பூழியர் கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு - அவ்விடத்துப் பூழி நாட்டாரது குளத்தினை நாடிச சென்று விளைாயடும் களிறும் பிடியும் போல முக மலர்ச்சியுற்று, ஏந்து எழில் ஆகத்துப் பூ தார் குழைய-உயர்ந்த அழகிய மார்பிலுள்ள மலர்மாலை அழகுகெட, நெருநல் ஆடினை புனலே - நேற்றுப் புனலாடினை,

11-15. இன்னு வந்து - இன்று இங்கு வந்து, ஆகம் வனம் முலை அரும்பிய சுணங்கின் - மார்பிலுள்ள அழகிய முலையில் தோன்றிய தேமலையும், மாசு இல் கற்பின் - குற்றமற்ற கற்பினையுமுடைய, புதல்வன் தாய் என - என் புதல்வன் தாயே என்ற, மாயப் பொய்மொழி சாயினை பயிற்றி-வஞ்சனை பொருந்திய பொய்ம்மொழியினை வணங்கிப் பலகாலும் கூறி, எம் முதுமை எள்ளல் - எம் முதுமைநிலையினை இகழாதேகொள், அஃது அமைகும் - அம் முதுமைக்கு நாங்கள் அமைவோம்,

16-20. சுடர் பூ தாமரை நீர் முதிர் பழனத்து - தீப்போலும் தாமரைப் பூக்களையுடைய நீர்மிக்க வயலில், அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி - அழகிய உட்டுளையுடைய வள்ளையினது மெல்லிய கொடிகளை உழக்கி, வாளை மேய்ந்த வள் எயிற்று நீர் நாய் - வாளை மீன்