களைத் தின்ற கூரிய பற்களையுடைய நீர்நாய், முள் அரைப் பிரம்பின் முது அரில் செறியும் - முட்கள் பொருந்திய தண்டினையுடைய பிரம்பினது பழைய தூறுகளில் தங்கி யிருக்கும் (இடங்களையுடைய), பல் வேல் மத்தி கழாஅர் அன்ன - பல வேற்படையினையுடைய மத்தியென்பானது கழாஅர் என்னும் ஊரினை யொத்த, 20-21. எம் இளமை சென்று தவ தொல்லஃது-எமது இளமை கழிந்து மிகப் பழைதாயிற்று, 22. பொய் மொழி எமக்கு இனிமை எவன் செய்வது-இனி நின் பொய்ம்மொழி எங்கட்கு இனிமை செய்வதென்பது எங்ஙனம் ஆகும்? (முடிபு) காவிரி நீத்தந்து நெருநல் புனல் ஆடினை; இன்று வந்து-சுணங்கினையும் கற்வினையுமுடைய புதல்வன் தாயெனப் பொய்ம்மொழி பயிற்றி எம்முதுமை எள்ளல்; அஃது அமைகும்: எம் இளமை தவத்தொல்லது; நின் பொய்ம்மொழி எமக்கு இனிமை செய்வது என்னை? சிலம்பினையும் தொடலையினையும் முன்கையினையும் தோளினையு முடைய ஐயை எனவும், நீர்நாய் மூதரிற் செறியுங் கழார் எனவும் இனையும். (வி - ரை.) ஐயையது கற்பின் சிறப்பு நோக்கி, ஐயை தந்தை என்றார். மழை வளந் தரூஉம் என்பதற்கு மழையாகிய வளத்தினைச் துரம் எனக் கொண்ட, தித்தனது செங்கோன்மை கூறிற்று எனலுமாம்; மழை வளம் தரும் ஐயை என்றியைத்தலும் பொருந்தும். வேழக்கோலைப் புணையாகக் கொண்டு புனலாடுதல் ‘கொடுங்கோல் வேழத்துப் புணை துணையாகப், புனலாடு கேண்மை’ (186) எனவும், யானை போலப் புணை தழுவிப் புனலாடுதல், தார்பூங் களிற்றிற் றலைப் புணைவும்’மைந்துமலி களிற்றிற் றலைப்புணை தழீஇ...காவிரிக்கோடு தோய் மலிர்நிறை யாடியோரே’ (166) எனவும்’மைந்துமல களிற்றிற் றலைப்புணை தழீஇ...நீர் பெயர்ந்தாடிய’ (266) எனவும் பின்னரும் வருதல் காண்க. யானை யெனவே பிடியும் அடங்கிற்று. ஆங்கு: அசை. புதல்வன் தாய் என்றது கொண்டு, முதுமை எள்ளல் என்றாள். நெருநல் பரத்தையுடன் புனலாடினவன் இன்று வந்து சுணங்கினையும் கற்பினையும் பாராட்டுதலின் அதனை மாயப்பொய்ம்மொழி யென்றாள். பயிற்றல் - பலகாற் சொல்லல். அஃது அமைகும் என்பதற்கு நீ செய்கின்ற பரத்தமைக்கு யாம் அமைவேம் என்றுமாம். தில்: விழைவின்கண் வந்தது; அசையுமாம். அரில் - தூறு; பிணக்கம். தொல்லஃது: ஆய்தம் விரித்தல். (உ-றை) “நீர் நாய் வாளைக்குக் காவலாகிய வள்ளையினது நிலையை நெகிழ்த்து, இழிந்ததாகிய வாளையை நுகர்ந்து, பிரம்பாகிய முதிய தூற்றிலே தங்கினாற் போல, நீயும் பரத்தையர்க்குக் காவலாகிய தாய் முதலாயினாரது நிலைமையை நெகிழ்த்துக் கு லமகளிரல்லாத விலை மகளிரை நுகர்ந்து, முன்பு நுமக்குண்டாகிய எங்கள் பழைமையைப் |