பக்கம் எண் :

களிற்றியானை நிரை23

பற்ற, ஒரு பயன் கருதாது தங்குதல் மாத்திரத்திற்கு எம்மில்லில வந்தீரென்றாளாம்.

(மே - ள்.) “வைகுறு விடியல்”1 என்னும் சூத்திர வுரையில் இச் செய்யுளை இத் துறைக்கே காட்டி, இஃதுஇளவேனில் வந்தது என்றும், ‘மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே’2 என்னும் சூத்திரத்து, புறத்திணையாற் கொண்ட மெய்ப் பெயரிடம் பற்றி அகத்திணைப் பொருள் நிகழவும் பெறும் எனக்கூறி, ‘அரிபெய் சிலம்பின்’ என்னும் அகப்பாட்டினுள் தித்தன் எனப் பாட்டுடைத்தலைவன் பெயரும், பிண்ட நெல்லின் என நாடும், உறந்தை என ஊரும், காவிரி யாடினை எனயாறுங் கூறிப் பின்னர் அகப்பொருள் நிகழ்ந்தவாறுங் கொள்க என்றும், ‘நிகழ்தகை மருங்கின்’3 என்னும் சூத்திரத்து, ‘ஆகவனமுலை...சாயினை பயிற்றி’ என்பது புலவிக்கண் தலைவன் புகழ்ந்தது என்றும் உரைத்தனர், நச். “மூப்பே பிணியே”4 என்னும் சூத்திரத்து ‘மாயப் பொய்ம் மொழி...தில்ல’ என்பதனைத் தன்கட் டோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது என்பதற்கு எடுத்துக் காட்டினர், பேரா.

7. பாலை

[மகட் போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று நவ்விப் பிணாக் கண்டு சொல்லியது.]

 முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின
தலைமுடி சான்ற தண்தழை யுடையை
அலமரல் ஆயமொ டியாங்கணும் படாஅல்
மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய
5. காப்பும் பூண்டிசின் கடையும் போகலை
பேதை அல்லை மேதையங் குறுமகள்
பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென
ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவித்
தன்சிதை வறிதல் அஞ்சி இன்சிலை
10. ஏறுடை இனத்த நாறுயிர் நவ்வி
வலைகாண் பிணையிற் போகி ஈங்கோர்
தொலைவில் வெள்வேல் விடலையொ டென்மகள்
இச்சுரம் படர்தந் தோளே ஆயிடை
அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தெனப்
15. பிற்படு பூசலின் வழிவழ யோடி

1. தொல்.அகத்: 8.

2. தொல்.புறத்: 32.

3. தொல். பொருளியல்: 24.

4. தொல். மெய்: 6.