| | மெய்த்தலைப் 1படுதல் செய்யேன் இத்தலை நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல் | | 20. | ஆய்சுளைப் பலவின் மேய்கலை உதிர்த்த துய்த்தலை வெண்காழ் பெறூஉங் கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே. | | | -கயமனார். |
(சொ - ள்.) 9-10. இன் சிலை ஏறு உடை இனத்த - இனிய முழக்கங்கொண்ட அண்மானாகிய இனத்தினையுடைய, நாறு உயிர் நவ்வி-உயிர்ப்புத் தோன்றும் இளைய மானே! 1-7. (என் மகளை நோக்கி யான்), மேதை அம் குறுமகள்-அறிவினையுடைய இளைய மகளே! முலை முகஞ் செய்தன - நினக்கம் முலைகள் அரும்பின, முள் எயிறு இலங்கின - (விழுநதெழுந்த) கூரிய பற்கள் ஒளி கொண்டன, தலை முடி சான்ற - கூந்தல் முடித்தல் அமைந்தன, தண் தழை உடையை - தண்ணிய தழையுடை கொண்டனை (ஆதலின்), அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் - சுழன்று திரியும் நின் ஆயத்தாருடன் எங்கணும் போகற்க, மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய-தென்மை வாய்ந்த இந்தப் பதியின் இடங்கள் தாக்கி வருந்தும் தெய்வங்களை யுடையன, காப்பும் பூண்டிசின் - (இவற்றால்) நீ காவலும் எய்தினை, கடையும் போகலை - இனி நீ நம் வாயிலகத்தும் போகற்பாலை யல்லை, பேதை அல்லை - நீ பேதைப் பருவத்தினை யல்லை, பெதும்பைப் பருவத்து புறத்து ஒதுங்கினை என- இப் பெதும்பைப் பருவத்து நீ புறத்துப் போனாய் என்னை என்று நான் வறு (அது கேட்டு), 17-22. பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி-பொன்னாலியன்ற புலிப்பல்லொடு கோக்கப்பெற்ற தனி மணித்தாலி யினையும், ஒலி கழை செயலை உடை மாண் அல்குல்-தழைத்த அசோகந்தளிராலாய தழையுடையால் மாண்புறும் அல்கலினையும் உடைய, பலவின் ஆய் சுளை மேய் கலை உதிர்த்த - பலாவினது சிறந்த சுளைகளை உண்ணும் முசுக்கலைகளால் உதிர்க்கப்பெற்ற, துய்தலை வெண் காழ பெறூஉம் - தலையில் ஆர்க்கினையுடைய வெள்ளிய பலா வித்துக்கள் மலையிடத்தே பொருந்திய சிறு குடியை யுடைய கானவன் மகளாகிய என் மகள்,
(பாடம்) 1. படுதல் செல்லேன். |