பழமையாகிய தன்மையையுடைய,வரிகிளர்வயமான் உரிவை தைஇய-கோடுகள் விளங்கும்வலிய புலியின் தோலை யுடுத்த, யாழ் கெழு மணிமிடற்று-மறையிசை பொருந்திய நீலமணிபோலும்திருமிடற்றனையுடைய, அந்தண்ன் - அந்தணனாகியசிவபிரான்; 1-2. கார்விரிகொன்றைப் பொன் நேர் புதுமலர் - கார்காலத்தில்விரியும் பொன்னை யொத்த கொன்றையின் புதியமலர்களாலாய, காரன் மாலையன் மலைந்த கண்ணியன் -தாரினை யுடையன் மாலையினை யுடையன் சூடிய கண்ணியையுடையன்; 3-7. மார்வினஃதேமைஇல் நுண்ஞாண் - அவன் மார்பின் கண்ணதுகுற்றமற்ற நுண்ணிய பூணூலாகும், நுதலது இமையாநாட்டம்-அவன் நெற்றியினிடத்ததுஇமைத்தலில்லாத கண், கையது இகல் அட்டுகணிச்சியொடு மழு-கையினிடத்தது பகைவரைக்கொன்றுகுந்தாலியுடன் விளங்கும் மழுப்படை, அதோலாதோற்கு - அந்தத் தோல்வி இல்லாதாற்கு,மூவாய் வேலும் உண்டு - மூன்று தலையினை யுடையசூலப்படையும் உண்டு, ஊர்ந்தது ஏறு - அவன் ஏறிநடாத்தியது ஆனேறு, சேர்ந்தோள் உமையே - அவனது ஒருகூற்றில் உறை பவள் உமை யாவள்; 16. தா இல் தாள்நிழல்-(அன்ன தன்மையனாகிய இறைவனது) அழிதலில்லாததிருவடி நிழலில், உலகு தவிர்ந்தன்று - உலகம்தங்கிற்று (ஆகலின் உலகிற்கு இடையூறில்லை என்க). (முடிபு) மணிமிடற்று அந்தண்ன் தாரன் மாலையன் கண்ணியன் ; அவன்மார்பினஃது ஞாண், நுதலது நாட்டம், கையது மழு ; அவற்குவேலு முண்டு ; அவன் ஊர்ந்தது ஏறு ; அவனைச்சேர்ந்தோள் உமை; அவன் தாள் நிழல் உலகம்தவிர்ந்தன்று. மேனியினையும்எயிற்றையும் சென்னியையும் உடைய அந்தணன் எனவும்,தொன்முறை மரபின் அந்தணன் எனவும், உரிவை தைஇயஅந்தணன் எனவும், மிடற்று அந்தணன் எனவும்தனித்தனி கூட்டுக. (விளக்க வுரை)யாழ்என்றது ஆகுபெயரால் மறையிசையைக் குறிக்கும் ;அன்றி யாழிசையுடன் பாடும் மிடற்றினையுடையன்என்னலுமாம்;1"எம்மிறைநல் வீணை வாசிக்குமே” என்றார்திருநாவுக்கரையரும். தாரன் முதலியவற்றில், தாரும்கண்ணியும் சிறப்பியல்பாக முறையே மார்விலும்சென்னியிலும்அணிவன ; மாலை அழகிற்கு மார்பில்அணிவது. பொன் ஏர் எனப் பிரித்தலுமாம்.மார்பினஃது: ஆய்தம் விரித்தல். கணிச்சியொடுவிளங்கும் மழு வென்க. தவிர்தல் - தங்குதல். மேனிமுதலியவற்றைக் கூறினார், அவ்வுருவைத் தியானம்பண்ணுக எனற்கு. (மேற்கோள்)“இசை திரிந் திசைப்பினும்”2என்னும் சூத்திரவுரையில், ‘சொல்லொடு சொல்தொடர்புடும் வாய்பாட்டாற்றொட
1. திருநாவுக்.தேவாரம். 2. தொல்.பொருளியல்:1. |