89. பாலை [மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.] | தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின் உறுபெயல் வறந்த ஓடுநேர் நனந்தலை உருத்தெழு குரல 1குடிஞைச் சேவல் புல்சாய் விடரகம் புலம்ப வரைய | | 5. | கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண் சிற்வீடு கறங்கும் சிறியிலை வேலத் தூழுறு விளைநெற் றுதிரக் காழியர் கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப் பொழியக் களரி பரந்த கல்நெடு மருங்கின் | | 10. | விளரூன் தின்ற வீங்குசிலை மறவர் மைபடு2 திண்டோள் மலிர வாட்டிப் பொறைமலி கழுதை நெடுநிறை தழீஇய திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த படுபுலாக் கமழும் ஞாட்பில் துடியிகுத் | | 15. | தருங்கலந் தெறுத்த பெரும்புகல் வலத்தார் வில்கெழு குறும்பிற் கோள்முறை பகுக்குங் கொல்லை யிரும்புனம் நெடிய என்னாது மெல்லென் சேவடி மெலிய ஏக வல்லுநள் கொல்லோ தானே தேம்பெய் | | 20. | தளவுறு தீம்பால் அலைப்பவும் உண்ணாள் இடுமணற் 3பந்தருள் இயலும் நெடுமென் பணைத்தோள் மாஅ யோளே. | | -மதுரைக் காஞ்சிப் புலவர். |
(சொ - ள்.) 19-22. தேம் பெய்து அளவுறு தீம்பால் - தேனைச் சொரிந்து கலந்த இனிய பாலை, அலைப்பவும் உண்ணாள்-அலைத் தூட்டவும் உண்ணாளாய், இடுமணல் பந்தருள் இயலும்-மணல் பரப்பிய பந்தருள்அங்கும் இங்கும் ஓடும், நெடுமென் பணைத்தோள் மா அயோள்-ந்ணட மெல்லிய மூங்கில் போலும் தோளினையுடைய மாமை நிறத்தின ளாகிய உன் மகள்; 1-2. தெறு கதிர் ஞாயிறு - யாவற்றையும் அழிக்கும் கதிர்களை யுடைய ஞாயிறு, நடு நின்று காய்தலின் - முதுவேனிற் காலத்து இடை
(பாடம்) 1. குடுமிச்சேவல். 2. திணிதோள். 3. பந்தரியலும். |