நாட்களில் நின்று எரித்தலின், உறுபெயல் வறந்த-மிக்க மழையாலாய நீர் வறண்ட, ஓடு தேர் நனந்தலை - பேய்த்தேர் ஓடும் அகன்ற இடத்தினையும்; 3-5. உருத்து எழு குரல குடிஞைச் சேவல் - வெகுண்டு எழு கின்ற குரலினையுடைய பேராந்தைச் சேவல், புல் சாய் விடர் அகம் புலம்ப-புற்கள் ஒழிந்த வெடிப்பிடங்கள் தனித்திடச் சென்று, வரைய கல் எறி இசையின் இரட்டும் - மலையிலுள்ள கற்கள் உருண்டு விழும் போது எழும் ஒசைபோல மாறி ஒலிக்கும் (இடத்தினையும்); 6-9. சிறி யிலை வேலத்து - சிறிய இலையினையுடைய வேல மரத்தின், ஊழ் உறு விளை நெற்று உதிர - முறையாக முற்றி விளைந்த நெற்று உதிர, சிள்வீடு கறங்கும் - சிற்வீ டென்னும் வண்டு ஒலிக்கம், கவ்வைப் பரப்பின் - ஆரவாரம் பொருந்திய பரப்பினையுடையதும், காழியர் வெவ்வுவர்ப்பு ஒழிய - வண்ணார்கள் எடுக்கும் வெவ்விய உவர் மண் ஒழிய, களரி பரந்த - களர் மண் பரந்ததுமாகிய, கல்நெடு மருங்கின் - கற்களை இடையே கொண்ட நீண்ட இடத்தினையும் உடையதும்; 10-6. விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் - கொழுப்பினை யுடைய ஊனைத்தின்ற விசைகொண்ட சிலையினராய மறவர்கள், மைபடு திண் தோள் மலிர - கருமை பொருந்திய வலிய தோள்கள் பூரிக்க, பொறை மலி கழுதை நெடுநிரை தழீஇய - பாரம்மிக்க கழுதைகளின் நீண்ட நிரைகளைப் பின்பற்றி வரும், திருந்து வாள்வயவர் வாட்டி அருந்தலை துமித்த - செப்பமுடைய வாளினைக் கொண்ட வீரர்களாய வணிகர்களை வாட்டி அவர்களது அரிய தலையைத் துணித்த, படு புலாகமழும் ஞாட்பில் - மிக்க புலவு நாறும் போர்க்களத்தே, துடிஇகுத்து-துடியனைத் தாழக் கொட்டி, அருங்கலம் தெறுத்த பெரும் புகல்வலத்தர் - அரிய அணிகலன்களைத் திறையாகப் பெற்றுக் குவித்த பெரிய போர் விருப்பினையுடைய வென்றியினர், வில்கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்-விற்கள் பொருந்திய அரணிடத்தே அவரவர் கொள்ள வேண்டிய முறையே பிரித்துக் கொடுப்பதுமாகிய; 17-9. கொல்லை இரும்புனம் நெடிய என்னாது - கொல்லையினை யுடைய பெரிய காடுகளை நீண்ட தூரத்தன என்றெண்ணாது, மெல்லென் சேவடி மெலிய ஏக வல்லுநள் கொல்லோ - மெத்தென்றிருக்கும் சிவந்த அடி வருந்தச் செல்லற்கு வன்மையுடையள் ஆவளோ? (முடிபு) தீம்பால் அலைப்பவும் உண்ணாள் பந்தருள் இயலும் மாஅயோன், கொல்லை யிரும் புனம் நெடிய வென்னாது சேவடி மெலிய ஏக வல்லுநன் கொல்லோ? ஓடுதேர் நனந்தலையினையும் கல்லெறி யிசையின் இரட்டும் இடத்தினையும் கன்னெடு மருங்கிளையு முடைய கொல்லைஇரும்புனம் எனவும், கோள் முறை பகுக்கும் கொல்லை இரும்புனம் எனவும் கூட்டுக. |