கதிர்களையுடைய ஞாயிறு, வளம் கெழு மாமலை பயம் கெடத் தெறுதலின்-வளம் வாய்ந்த பெரிய மலையின் பயன் கெட்டொழியக்காய்தலின், அருவி ஆன்ற பெருவரை மருங்கின்- அருவி இல்லையான பெரிய பககமலையினிடத்து, சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது - தெய்வத் தினையுடைய சுனையைத் துழவி நீராகிய பயனைக் காணாது, பாசிதின்ற பைங்கண் யானை - பாசியினைத் தின்ற பசிய கண்ணினையுடைய ஆண் யானை, ஒய் பசிப் பிடியொடு ஒரு திறன் ஒடுங்க - அயர்வினைத்தரும் பசியினையுடைய பெண் யானையினுடன் ஒரு பக்கத்தே ஒடுங்கிக்கிடக்க, வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை-மூங்கில்கள் கணுக்கள் பளிந்த வெயில் விளங்கும் அகன்ற பாலை நிலத்தே, அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும் - அரிய பொருள் விருப்பால் நம் தலைவர் நம்மைப் பிரிந்து சென்றாராயினும், பெரும் பே ரன்பினர் - மிகப் பெரிய அன்பினராகலின், 9-18. இரு கேழ் இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை - கரிய நிறமுடைய ஆண்மான்கள் தங்கம் பரலையுடைய உயர்ந்த கற்கவியலில், கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த - வன்கண்மையினை யுடைய மழவர்கள் களவாகிய உழவிற்கு எழும் இடமாகிய, நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்-நீண்ட அடியை யுடைய ஈரப்பலா மரங்களை யுடைய ஒடுங்காடு என்னும் ஊர்க்கு அப்பால், விசிபியி முழவின் குட்டுவன் காப்ப - இறுகப் பிணித்த முழவினை யுடைய குட்டுவன் என் பான் புரத்தலால், பசி எனவு அறியா பணை பயில் இருக்கை - பசி எனலை அறியாத மருதவளம் மிக்க ஊர்களையுடைய, தட மருப்பு எருமை தாமரை முனையின் - வளைந்த கொம்பினையுடைய எருமை (மேய்ந்த) தாமரையை வெறுக்குமாயின், முடம் முதிர் பலவின் கொப நிழல் வதியும் - வளைவு மிக்க பலாவினது கொழுவிய நிழற்கண்ணே தங்கும், குடநாடு பெறினும் - குடநாட்டினையே பெறுவராயினும், மடமான் நோக்கி - இளமை வாய்ந்த மான் போலும் பார்வையினை யுடையாய், நின் மாண் நலம் மறந்து தவிரலர் நினது மாண்புற்ற நலத்தினை மறந்து ஆங்குத் தங்குவாரல்லர். (முடிபு) தோழி! மானோக்கி! நம் தலைவர் வெயிலவிர் நனந்தலை அரும்பொருள் வேட்கையின் அகன்றனராயினும் பெரும் பேரன்பினராகலின் குடநாடு பெறினும் நின் மாணலம் மறந்து ஆங்குத் தவிரலர். (வி - ரை.) மாரிக்கண் உண்ட நீரைக் கோடையில் உமிழும் இயல் பினதாகிய மலையின் பயன் கெடத்தெறும் என வேனிலின் வெம்மை மிகுதி கூறியவாற்றாயிற்று. ஆன்ற - இல்லையான; அகன்ற என்பதன் மரூஉ. சுனைக்கண் சூர் உறையும் என்பதனை, 1'சுனை யுறையும், சூர்மகள் மாதோ - என்னுமென் நெஞ்சே’ என்பதனானும் அறிக. சூர், அச்சமுமாம். யானை பாசியைத் தின்றமை நீர்ப்பசை கருதி யென்க.
1. அகம்: 198. |