பக்கம் எண் :

214அகநானூறு

ஒடு - ஒருவகை மரம் என்பதும், அதன்முன் வல்லெழுத்துவரின், மெலிமிகும் என்பதும், 1'உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே’ ‘ஒடுமரக் கிளவி யுதிமர வியற்றே’ என்பவற்றால் அறியப்படும். ஈண்டு ஒடு மரங்கள் சூழ்ந்தமையின் ஒடுங்காடு எனப்பட்ட தென்க. இருக்கையையுடைய குட நாடு என்க. எருமை தாமரை முனையின் பலவின் நிழலில் வதியும் என்றது, மருதத்திற்கும் குறிஞ்சிக்கும் அணிமை வறியபடியாம். எருமை, தாமரை யென்னும் மருதக் கருப்பொருள்கள் பாலைக்கண் வந்தன; என்னை? 2'எந்நில மருங்கிற் பூவும் புள்ளும், அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும், வந்த நிலத்தின் பயத்த வாகும்’ என்பவாகலின் என்க.

92. குறிஞ்சி

[இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்குந் தலைமகனைப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால் தோழி வரைவுகடாயது.]

நெடுமலை யடுக்கம் கண்கெட மின்னிப்
படுமழை பொழிந்த பானாட் கங்குல்
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச்
செங்கண் இரும்புலி குழுமுஞ் சாரல்
5. வாரல் வாழியர் ஐய நேரிறை
நெடுமென் பணைத்தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே நாளை
மந்தியும் அறியா மரம்பயில் இறும்பின்
ஒண்செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்
10. தண்பல் அருவித் தாழ்நீர் ஒருசிறை
உருமுச்சிவந் தெறிந்த உரனழி பாம்பின்
திருமணி விளக்கிற் பெறுகுவை
இருண்மென் கூந்தல் ஏமுறு துயிலே.

-மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்.

(சொ - ள்.) 1-5. ஐய-, வாழியர்-, நெடுமலை அடுக்கம் கண் கெட மின்னி - உயர்ந்த மலையின் பக்கங்களில் கண்ணொளி கெட மின்னி, படு மழை பொழந்தால்நாள் கங்குல்- மிக்க மழை சொரிந்த பாதி யிரவாகிய இருளில், குஞ்சரம் நடுங்கத் தாக்கி - யானையை நடுங்கும்படி தாக்கி, கொடுவரி செங்கண் இரும்புலி குழுமும் சாரல் -


1. தொல்.எழுத். உயிர்மயங்: 41-90.

2. தொல். அகத்: 19.