9-16. நிலம் பக - நிலம் பிளக்குமாறு, அழம்போல் வெங்கதிர் - தீயைப் போன்று வெப்ப மிக்க ஞாயிற்றின் கதிர், பைது அறதெறுதலின் - பசுமையறக் காய்தலின், நிழல் தேய்ந்து உலறிய மரத்த-நிழல் சுருங்க வற்றிய மரங்களையுடைய, அறை காய்பு - பாறைகள் கொதித்து, அறுநீர் பைஞ் சுனை - நீர் அற்ற பசிய காய்பு - பாறைகள் கொதத்து, அறுநீர் பைஞ் சுனை - நீர் அற்ற பசிய சுனைகளிலும், ஆம் அறப் புலர்தலின் - ஈரம் இல்லையாம்படி காய்தலின், உகு நெல் பொரியும் வெம்மைய - அங்குச் சொரியும் நெல்லும் பொரியும் வெம்மையை உடைய, யாவரும் வழங்குநர் இன்மையின் - வழிச் செல்வார் யாவரும் இன்மையின், வௌவுநர் மடிய-ஆறலைப்போரும் வறுமையால் மெலிய, சுரம் நார் இல் முருங்கை நவிரல் வான்பூ-அசையுங் கிளையினையுடைய நார் இல்லாத முருங்கையின் குலைந்த வெள்ளிய பூக்கள், சூரல் கடு வளி எடுப்ப-கடிய சூறாவளியாகிய காற்று வாரி வீச, ஆர்உற்று-ஆர்த்தலுற்ற, உடைதிரைப் பிதிர்வில் பொங்கி - உடைந்த திரையின் துளிகளைப்போலப் பரந்து கிடத்தலின், முன் கடல்போல் தோன்றல-கடலின் கரையகம் போலத் தோன்றுதலையுடைய, காடு இறந்தோர்-காட்டினைக் கடந்தேகிய நம் தலைவர், 1-7. வண்டுபட ததைந்த கண்ணி - வண்டுகள் மொய்த்திட மலர்ந்த பூக்களாலாய கண்ணியினையும், ஒள் கழல் - ஒள்ளிய கழலினையும் உடைய, உருவ குதிரை மழவர் ஓட்டிய - அஞ்சத்தக்க குதிரை களையுடைய மழவரை வென்றோட்டிய, முருகன் நற்போர் - முருகனைப் போன்ற நல்ல போர்வெற்றியினையுடைய, நெடுவேள் வி - பெருமை யுடைய வேளாகிய ஆவி என்பானது, அறுகோட்டு யானை - அறுத்துத் திருத்திய கோட்டினையுடைய யானைகளையுடைய, பொதினி ஆங்கண் - பொதினி மலையாகிய அவ்விடத்திருந்து, சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல்போல் பிரியலம் என்ற சொல் தாம் - சிறியனாகிய சாணைக்கல் செய்வோன் அரக்கொடு சேர்த்தியற்றிய கல்லைப்போலப் பிரியேம் என்று கூறிய சொல்லை, மறந்தனர் கொல் - மறந்துவிட்டனரோ? (முடிபு) தோழி, சேய்நாட்டு வெறுக்கை தருமார் தோள் நெகிழக் காடிறந் தோர், பிரியலம் என்ற சொல் மறந்தனரோ? மரத்த, வெம்மைய, ஆற்ற, தோன்றல ஆகிய காடு எனவும், தருமார் இறந்தோர் எனவும் கூட்டுக. (வி - ரை.) வண்டுபட - பட: காரணப் பொருட்டு ; காரியப் பொருட்டும் ஆம். ததைந்த - சிதறின எனலும் ஆம். வண்டு படத்ததைந்த என்பது சினைக்கு ஏற்ற அடை. உரு - உருவ என ஈறுதிர்ந்தது; அழகிய குதிரை என்னலுமாம். மழவர் ஒட்டிய: உயர்திணை மருங்கின் இரண்டனுருபு தொக்கு வந்தது. ஒட்டிய ஆவி எனவும், பொதினி யாங்கண் சொல்லிய சொல் எனவும் கூட்டுக. அறுகு ஓட்டு எனப் பிரித்துச் சிங்கத்தை வென்ற எனலுமாம். பொதினி - ஆவியின் |