பக்கம் எண் :

21

நைப்பக், கனையெரி யுரறிய மருங்கும்” (புறநா. 7 : 8 - 9, 16 : 17, 23 : 10 - 11) ; ‘‘யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து, முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு”, ‘‘பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கு”, ‘‘ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப், போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப” (பதிற். 15 : 1 - 2, 25 : 7, 71 : 9 - 10) ; ‘‘செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல, எரிமேய்ந்த கரிவறல்” (கலித். 13 : 1 - 2) ; ‘‘நாடுகெட வெரிபரப்பி” (மதுரைக். 126)

23. அத்தை என்னும் இடைச்சொல் முன்னிலையசையாய் வருமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். இடை. சூ. 47. தெய்வச்.; இ. வி. சூ. 276, உரை.

24. ‘‘துனிநீங்கி யாட றொடங்கு துனிநனி, கன்றிடிற் காமங் கெடூஉம்” (பரி. 6 : 97 - 8)

25. வென்று அகத்தடக்கல் : புறநா. 77 : 10 - 13.

26. ‘‘தண்டாக் களிப்பு” (மணி. 6 : 126)

29. இது, யகரவீற்றுவியங்கோளுக்கு மேற்கோள் : தொல். உயிர். சூ. 8, இளம்.; நன். மயிலை. சூ. 337; நன். வி. சூ. 338; இ. வி. சூ. 239, உரை; மன்னாமை நிலையாமையை உணர்த்துமென்பதற்கு மேற்கோள்; தொல். கிளவி. சூ. 34, ந.

மு. ‘‘இதனுள் இயல்பாகிய குணங்கூறி அவற்றோடு செவியுறையும் கூறினான், செவியுறைப்பொருள் சிறப்புடைத்தென்று அவன்கருதி வாழ்தல் வேண்டி” (தொல். புறத்திணை. சூ. 35; செய். சூ. 144, ந.)
பாட்டுடைத்தலைவன் பெயரின் ஒருபகுதி இப்பாட்டின் 26 - ஆம் அடியில் அமைந்திருத்தல் காண்க.

(6)

7

களிறு கடைஇயதாட்
கழலுரீஇய திருந்தடிக்
கணைபொருது கவிவண்கையாற்
கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து
5மாமறுத்த மலர்மார்பிற்
றோல்பெயரிய வெறுழ்முன்பின்
எல்லையு மிரவு மெண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலி னல்ல
10இல்லவா குபவா லியறேர் வளவ
தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்றிகழ் வைப்பிற்பிற ரகன்றலை நாடே.