வைகுந்த மதன்மேற் கந்தன், வளங்கெழு முலகம் வெற்பின் மாதுலகதனின் மேலாம், களங்கனி யனைய கண்ட னுலகதன் மேலாம் பாங்கர், உளங்கவர் வனப்பின் மேவுங் கோவின துலக மாமே” (காசிகாண்டம், 2 : 29) என்னுஞ் செய்யுளாலுமுணர்க. 8. இவ்வடி அகலக்கவியைக் கொண்டோர் பெறும் பயனுக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது; இ. வி. சூ. 940, உரை. 9. ‘‘வாண்ஞமற்கு” (சீவக. 251) ; ‘‘ஞெமன்ன், றெரிகோலன்ன” (அகநா. 349 : 3 - 4) 9 - 10. குறள், 118; ‘‘செம்பொற்றுலைத், தால மன்ன தனிநிலை தாங்கிய, ஞால மன்னற்கு” (கம்ப. மந்தரை. 19) ; ‘‘ஓர்வுற் றொருதிறமொல்காத நேர்கோல், அறம்புரி நெஞ்சத் தவன்” (கலித். 42 : 14 - 5) 12. ‘கடற்படை குளிப்ப மண்டி’ என்பது, பின்னின்ற மொழி முன்னே மாற்றப்பட்டதற்கு மேற்கோள்; தொல். எச்ச. சூ. 13, ந. 11 - 2. ‘‘விரிகடல் வியன்றானையொடு, முருகுறழப் பகைத்தலைச் சென்று” (மதுரைக். 180 - 81) 16. ‘‘வரிசை யறிதலோ வரிதே” (புறநா. 121 : 3) ; ‘‘வரிசையறிதலும் வரையாது கொடுத்தலும்” (சிறுபாண். 217) 15 - 6. ‘‘ஆண்டுநீர்ப் பெற்ற தார மீண்டிவர், கொள்ளாப் பாடற்கெளிதினி னீயும்” (பதிற். 48 : 5 - 6) ; ‘‘அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண், வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட், செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி, வரிச்சிலையாற் றந்த வளம்” (பு. வெ. 16) ; ‘‘கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ, மறங்கலங்கத் தலைச்சென்று, வாளுழந்ததன் றாள்வாழ்த்தி, நாளீண்டிய நல்லகவர்க்குத், தேரோடு மாசிதறி” (மதுரைக். 220 - 24) ; ‘‘பலர்புறங் கண்டவ ரருங்கலந் தரீஇப், புலவோர்க்குச் சுரக்குமவ னீகை மாரியும்” (மலைபடு. 71 - 2) 11 - 6. ‘‘விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி, நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்” (சிறுபாண். 247 - 8) 17 - 8. ‘‘நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி, உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி, மறஞ்சேர் வஞ்சி மாலை யொடுபுனைந், திறைஞ்சாச் சென்னி யிறைஞ்சிவலங் கொண்டு” (சிலப். 26 : 54 - 7.) 20. ‘‘முனிவர்.......வாழ்கெனப் பரவிப் பாணியை விரித்தனர் நிற்ப” (கந்த, சூரனரசிருக்கை. 19) 19 - 20. ‘‘பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே” (பதிற். 63 : 1) 17 - 20. இவ்வடிகள், செவியுறை வாழ்த்திற்கு மேற்கோள்: (தொல். செய். சூ. 114, பேர்.) 22. ‘‘ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக், கொள்ளை மேவலை”, ‘‘ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை”, ‘‘வினைபுனை நல்லில் வெவ்வெரி
|