பக்கம் எண் :

19

தேஎத்து (11) என்பதனுள், அத்தை அசைநிலையாக்கி, தேயம் கடற்படைக்குள்ளே குளிப்பவென்றுரைப்பாருமுளர்.

ஞமன் (9) - யமனெனினுமமையும். அடற்புகர்ச் சிறுகண் யானை (12) யென்று பாடமோதி, கொலையைச்செய்யும் புகரையுடைய யானையெனினும் அமையும்.

ஆகி (8) , ஆகவெனத் திரிந்துநின்றது; ஆகியென்பதனைத் திரியாது, நிற்றிறஞ் சிறக்க (10) என்பதனோடு இயைத்துரைப்பாரும் உளர். நின்றிறம், நிற்றிறமென வலிந்து நின்றது.

நகர்வலஞ்செயற்குப் பணியியரென வீடும், ஏந்துகையெதிர் இறைஞ்சுகவென அறமும், புகையெறித்தலான் வாடுகவெனப் பொருளும், முகத்தெதிர் தணிகவென இன்பமும் கூறியவாறாயிற்று.

இஃது, இவ்வாறு செய்கவென அரசியல் கூறலிற் 1 செவியறிவுறூஉவும், மதியமும் ஞாயிறும்போல மன்னுகவென்றமையான் வாழ்த்தியலுமாயிற்று.

(கு - ரை.) 1. கட்டளை ஒரூஉ மோனைக்கு இது மேற்கோள்; (தொல். செய். சூ. 92, ந.;) ஆசிரியத்தில் அடிமுதற்கண், ‘வடாஅது’ என உகரவீறாய நேரீற்றியற்சீர்க்கூன் அருகி வந்ததற்கு மேற்கோள்; யா. வி. சூ. 94.

2. ‘‘தெனாஅ துருகெழு குமரி யென்னுங் குறிப்பு வினைச்சொல் குறிப்பினானன்றி வினையறியலாகாமையின், வினைக்குறிப்புமொழி” (நன். மயிலை. சூ. 268)

1 - 2. ‘‘வடாஅது, தெனாஅதென்பனவும் ஏழாம்வேற்றுமைப் பொருண்மைக்கண் வந்த வினைக்குறிப்பு; பெயருமாம்”, ‘‘வடாஅது, தெனா அதென்பன ஏழுனுருபின் பொருள்பட வந்தன” (தொல். வினை. சூ. 23. சே. ந.)

3. சகரரால் தோண்டப்பட்டமையின் கீழ்கடலைத் தொடுகடலென்றார்; ‘‘தொட்ட பைங்கடற் சூரியன் றோன்றுமுன் றோன்றி” (வி. பா. நிரைமீட்சி. 24)

4. மேல்கடல் பழையதாதலின், தொன்றுமுதிர் பௌவமெனப்பட்டது.

1 - 4. ‘‘தென்குமரி வடபெருங்கல், குணகுடகட லாவெல்லை”, (புறநா. 17 : 1 - 2; மதுரைக். 70 - 71)

7. ஆனிலையுலகம் - கோலோகம். இதனியல்பை, சிவதருமோத் தரத்துள்ள கோபுரவியலாலும், ‘‘விளங்குநம் முலகின் மேலாம்


1. செவியறிவுறூஉ : ஒருவுதல், ஒரூஉதல் எனவும் ஒரூஉஎனவும் கூறப்படுதல்போல உறுதலும் உறூஉதலெனவும் உறூஉவெனவும் கூறப்படுமென்பர்; தொல். புறத்திணை. 35, ந.