126 | ஒன்னார் யானை யோடைப்பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇ வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர் ஓடாப் பூட்கை யுரவோன் மருக | | 5 | வல்லே மல்லே மாயினும் வல்லே நின்வயிற் கிளக்குவ மாயிற் கங்குல் துயின்மடிந் தன்ன தூங்கிரு ளிறும்பிற் பறையிசை யருவி முள்ளூர்ப் பொருந தெறலரு மரபினின் கிளையொடும் பொலிய | | 10 | நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம் புலனழுக் கற்ற வந்த ணாளன் இரந்துசென் மாக்கட் கினியிட னின்றிப் பரந்திசை நிற்கப் பாடின னதற்கொண்டு சினமிகு தானை வானவன் குடகடற் | | 15 | பொலந்தரு நாவா யோட்டிய வவ்வழிப் பிறகலஞ் செல்கலா தனையே மத்தை இன்மை துரப்ப விசைதர வந்துநின் வண்மையிற் றொடுத்தனம் யாமே முள்ளெயிற் றரவெறி யுருமின் முரசெழுந் தியம்ப | | 20 | அண்ணல் யானையொடு வேந்துகளத் தொழிய அருஞ்சமந் ததையத் தாக்கி நன்றும் நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே. |
(பி - ம்.) 10 ‘நிலமிசைப் பிறந்த’ 15 - 6 ‘வழிப்பிறர் கலஞ்’ திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை. மலையமான் திருமுடிக்காரியை மாறோக்கத்து (பி - ம். மாறோக்கத்து) நப்பசலையார் பாடியது. (இ - ள்.) பகைவருடைய யானையினது பட்டத்திற் பொன்னைக் கொண்டு பாணரது தலை பொலியும்படி செய்து வாடாத பொற்றாமரையைச் சூட்டிய சிறந்த தலைமையினையும் புறக்கொடாத மேற்கோளினையும் உடைய பெரியோன்மரபினுள்ளாய்! ஒன்றைக் கற்றறிவேமாயினும் அறியேமாயினும் விரைய நின்னிடத்துப் புகழைச் சொல்லுவேமாயின், இராப்பொழுதுதான் ஓரிடத்தே உறங்குவதுபோன்ற செறிந்த இருளையுடைய சிறுகாட்டையும் பறையொலிபோலும் ஒலிபொருந்திய அருவியையுமுடைய முள்ளூர்க்கு வேந்தே! அழித்தற்கரிய தன்மையையுடைய
|