பக்கம் எண் :

244

நின்சுற்றத்துடனே பெருக நிலத்தின்மேல் மிக்க மாந்தரெல்லாரினும் அறிவின்கண் மாசற்ற 1அந்தணாளனாகிய கபிலன் இரந்துசெல்லும் புலவர்க்கு இனிப் புகழ்தற்கு இடனில்லையாகப்பரந்து புகழ்நிற்பப் பாடினான்; அதனைக் கொண்டு சினமிக்க சேனையையுடைய 2சேரன் மேல்கடலின்கட் பொன்னைத்தரும் நாவாய் செலுத்திய அவ்விடத்து வேறு சில மரக்கலம் போகமாட்டாத அத்தன்மையையுடையேமாயும் எமது மிடி துரக்க நின்புகழ் கொடுவர வந்து நினது வண்மையிலே சில சொல்லத் தொடுத்தனம், யாங்கள்; முட்போலும் பல்லினையுடைய பாம்பை எறியும் இடியேறுபோல முரசு கிளர்ந்தொலிப்பத் தலைமையையுடைய யானையுடனே அரசு போர்க்களத்தின்கட்படப் பொறுத்தற்கரிய பூசலைச் சிதற வெட்டிப் பெரிதும் பொருந்தாத பகைவரைத் தடுக்கும் பெண்ணையாற்றுப்பக்கத்தை யுடைய நாட்டையுடையோய்!-எ - று.

உரவோன்மருக! பொருந! நாடுகிழவோய்! நின்வயிற் கிளக்குவமாயின், அந்தணாளன் கிளையொடும் பொலிய இசைநிற்பப் பாடினன்; அதற்கொண்டு பிறகலம் செல்லாத அனையேமாயும், இன்மை துரத்தலால் இசைதர வந்து நின்வண்மையிற் சில தொடுத்தேம் யாமெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

மக்கட்கெல்லாமென்பது ஐந்தாவதன்மயக்கம். மக்கட்கெல்லாம் ஒக்கவெனினும் அமையும்.

வண்மையிற்றொடுத்தனமென்பதற்கு நின் வண்மையால் வளைப் புண்டனமெனினும் அமையும்.

(கு - ரை.) 2 - 3. பாணருக்குப் பொற்றாமரை அளித்தல் : புறநா. 11 : 11 - 7, குறிப்புரை.

4. புறநா. 139 : 7; "ஓடாப் பூட்கை" (முருகு. 247)

6 - 7. "கார்வண்டு, தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப், புக்கிருந்தா லன்ன பொழில்" (நள. சுயம். 22)

8. புறநா. 229 : 4; "பறைக்குர லருவி" (பதிற். 70) ; "பறையிசை யருவி" (சிலப். 25 : 28)

'இசை' என்னும் உரிச்சொல் ஒலித்தற் றொழிற்பண்பில் வந்ததற்கு மேற்கோள்; நன். சூ. 458, மயிலை.; நன். வி. சூ. 459.

19. அரவெறியுரும்: புறநா. 58 : 6 - 7, குறிப்புரை. முரசுக்கு இடி : புறநா. 17 : 39, குறிப்புரை.

(126)


1. "நீறுமேற் பூத்த நெருப்பு" (பு. வெ.166)

2. இச்சேரன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்.