7 - 10. "நறியன வயலவர் நாவி னீர்வர, உறுபத நுங்கிய வொருவ னாகயான்" (கம்ப. பள்ளியடை. 111) மு. பாடாண்டிணைத் துறைகளுள் கொடுப்போ ரேத்திக் கொடார்ப் பழித்தற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 29, இளம்.; சூ. 35, ந. (127) 128 | மன்றப் பலவின் மாச்சினை மந்தி இரவலர் நாற்றிய விசிகூடு முழவின் பாடின் றெண்கண் கனிசெத் தடிப்பின் அன்னச் சேவன் மாறெழுந் தாலும் | | 5 | கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில் ஆடுமகள் குறுகினல்லது பீடுகெழு மன்னர் குறுகலோ வரிதே. |
திணை - அது; துறை - வாழ்த்து; இயன்மொழியுமாம். அவனை அவர் பாடியது. (இ - ள்.) ஊர்ப்பொதுவின்கண் பலவினது பெரிய கோட்டின்கண் வாழும் மந்தி பரிசிலர் தூக்கிவைக்கப்பட்ட பிணிப்புப் பொருந்திய மத்தளத்தினது ஓசையினிய தெளிந்த கண்ணைப் பலாப்பழமென்று கருதித் தட்டினவிடத்து அதன்கண் வாழும் அன்னச்சேவல் அவ்வோசைக்கு மாறாக எழுந்து ஒலிக்கும் கழல இடப்பட்ட வீரவளையையுடைய ஆயது முகில் படியும் கொதியின்மலை, ஆடச்செல்லும் மகள் அணுகினல்லது பெருமை பொருந்திய அரசர் அணுகுதல் அரிது-எ - று. இது கொடைச்சிறப்பும் வென்றியும் கூறியவாறாயிற்று. (கு - ரை.) 1. மன்றப்பலவு : புறநா. 374 : 5. 1 - 2. புறநா. 89 : 7 - 8. 1 - 3. முழவுக்குப் பலாப்பழம் : புறநா. 236 : 1. 3. செத்து - கருதி; "தூவற் கலித்த புதுமுகை யூன்செத், தறியாதெடுத்த புன்புறச் சேவல்" (மலைபடு. 146 - 7) 5. மு. குறுந். 84 : 3. 6 - 7. புறநா. 54 : 4 - 14, 109 : 15 - 8, 111. (128) 129 | குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள் வாங்கமைப் பழுனிய தேறன் மகிழ்ந்து வேங்கை முன்றிற் குரவை யயரும் தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன் | | 5 | ஆஅ யண்டிர னடுபோ ரண்ணல் |
|