135 | கொடுவரி வழங்குங் கோடுயர் நெடுவரை அருவிடர்ச் சிறுநெறி யேறலின் வருந்தித் தடவரல் கொண்ட தகைமெல் லொதுக்கின் வளைக்கை விறலியென் பின்ன ளாகப் | | 5 | பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் வரிநவில் பனுவல் புலம்பெயர்ந் திசைப்பப் படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ் ஒல்க லுள்ளமொ டொருபுடைத் தழீஇப் புகழ்சால் சிறப்பினின் னல்லிசை யுள்ளி | | 10 | வந்தனெ னெந்தை யானே யென்றும் மன்றுபடு பரிசிலர்க் காணிற் கன்றொடு கறையடி யானை யிரியல் போக்கும் மலைகெழு நாடன் மாவே ளாஅய் களிறு மன்றே மாவு மன்றே | | 15 | ஒளிறுபடைப் புரவிய தேரு மன்றே பாணர் பாடுநர் பரிசில ராங்கவர் தமதெனத் தொடுக்குவ ராயி னெமதெனப் பற்ற றேற்றாப் பயங்கெழு தாயமொ டன்ன வாகநின் னூழி நின்னைக் | | 20 | காண்டல் வேண்டிய வளவை வேண்டார் உறுமுரண் கடந்த வாற்றற் பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே. |
திணை - அது; துறை - பரிசிற்றுறை. அவனை அவர் பாடியது. (இ - ள்.) புலி இயங்கும் சிகரம்உயர்ந்த நெடிய மலையின்கண் ஏறுதற்கரியபிளப்பின்கட் சிறியவழியை யேறுதலான் வருத்தமுற்றுஉடல் வளைவைப் பொருந்திய பயில அடியிட்டு நடக்கின்றமெல்லிய நடையினையுடைய வளையையணிந்த கையையுடையவிறலி என்பின்னே வரப்பொன்னைக் கம்பியாகச்செய்தாற்போன்ற முறுக்கடங்கிய நரம்பினை யுடையவரிப்பொருண்மையோடு பயிலும் பாட்டு 1நிலந்தோறும்மாறிமாறி யொலிப்பப் படுமலைப்பாலை நிலைபெற்றபயன்பொருந்திய சிறிய யாழைத் தளர்ந்த நெஞ்சத்துடனே ஒருமருங்கிலே அணைத்துக்கொண்டு புகழ்தற்கமைந்ததலைமையையுடைய நினது
1. ஐந்திணைக்கும் உரியனவாக ஐந்துயாழும் பண்களும் உண்மையின் இங்ஙனம் கூறினார்.
|