பக்கம் எண் :

254

நல்ல புகழை நினைந்து வந்தேன்,என்னுடைய இறைவா! யான் ; எந்நாளும் மன்றத்தின்கண்வந்த பரிசிலரைக் காணிற் கன்றுடனே 1கறைபொருந்திய அடியையுடைய யானையை அணியணியாகச்சாய்த்துக்கொடுக்கும் மலையையுடைய நாடனே!மாவேளாகிய ஆயே! யாம் வேண்டியது யானையுமன்று;குதிரையுமன்று; விளங்கிய பொற்படையையுடைய குதிரையிற்பூட்டப்பட்ட தேருமன்று; பாணரும் புலவரும் கூத்தர்முதலாயினாருமாகிய அவர்கள் தம்முடைய பொருளெனவளைத்துக்கொள்வாராயின் அதனை எம்முடையதென்றுஅவர்பால் நின்றும் மீண்டு கைக்கொள்ளுதலைத் தெளியாதபயன்பொருந்திய உரிமையோடு கூடி மற்றும் அத்தன்மையவாக,நின்னுடைய வாழ்நாட்கள்; யான் வந்தது நின்னைக்காண்டல்வேண்டிய மாத்திரையே. பகைவரது மிக்க மாறுபாட்டைவென்ற வலியையுடைய, யாவரும் ஒப்பப் புகழும்நாட்டையுடையாய்-எ - று.

நாடுகிழவோய்! யான் வந்தது களிறுமுதலாயினவேண்டியன்று; நின்னைக் காண்டல்வேண்டிய அளவே;நின் ஊழி அன்னவாகவெனக் கூட்டுக.

அல்லதூஉம், யானைமுதலாயினவன்றிப்பிறவற்றையும் பாணர் முதலாயினார் தமதெனத் தொடுக்குவராயினெனஇயைத்துரைப்பினும் அமையும்.

கொடுவரி : பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை;ஆகுபெயருமாம்.
இனி, 'ததைமெல்லொதுக்கின்' எனவும், 'வடிநவில்பனுவல்'எனவும், 'ஒளிறுநடைப்புரவிய' எனவும் பாடமோதுவாரும்உளர்.

வடிநவில் பனுவல் புலம்பெயர்த் திசைப்பவென்றுகொண்டுவடித்தல் பயின்ற பாட்டை இசைதோறும் பெயர்த்துவாசிக்கவென்றுரைப்பாரும் உளர்.

பொதுமீக்கூற்றம், பொதியிலுமாம்.

(கு - ரை.) 1 - 4. புறநா. 139 : 3 -4; "உயர்ந்தோங்கு பெருமலை யூறின்றேறலின், மதந்தபுஞமலி நாவி னன்ன, துளங்கியன் மெலிந்த கல்பொருசீறடிக், கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ,விலங்கு மலைத் தமர்ந்த சேயரிநாட்டத், திலங்குவளைவிறலியர்" (மலைபடு. 41-6)

3. தடவென்பது வளைவுப் பொருளையுணர்த்துவதோர்உரிச்
சொல்; தொல். உரி. சூ. 23.

6. "வரியெனப் படுவது வகுக்குங்காலைப், பிறந்த நிலனும் சிறந்த தொழிலும், அறியக்கூறி யாற்றுழி வழங்கல்", " கண்கூடு காண்வரியுள்வரி புறவரி, கிளர்வரி யைந்தோ டொன்றவுரைப்பிற்,


1.புறநா. 39 : 1 - 2, உரை.