பக்கம் எண் :

33

5. ‘‘புல்லிலை வஞ்சிப் புறமதி லலைக்கும், கல்லென் பொருநை” (புறநா. 387 : 33 - 4)

2 - 5. ‘‘மணற், செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத், தண் கய மாடு மகளிர்” (புறநா. 243 : 1 - 3)

6. பொருவென்பது, பயவுவமைபற்றி வருமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உவம. சூ. 14, பேர்.; இ. வி. சூ. 642, உரை.

7 - 9. சின்னென்பது பால்காட்டும் எழுத்தோடு அடுத்து வருமென்பதற்கு மேற்கோள்; தொல். இடை. சூ 26, பேர்.

11 - 3. தொல். எச்ச. சூ. 53, தெய்வச். மேற்.

16. ‘‘அழல்புரிந்த வடர்தாமரை” (புறநா. 29 : 1)

15 - 7. எனவும் ஆங்கும் அசைநிலையாயின வென்பதற்கு மேற்கோள்; தொல். இடை.. சூ. 47, தெய்வச்.

14 - 7. ‘‘இழைபெற்ற.....பெற்றிசினே; இஃது, ஈற்றயலடி மூச்சீர்த் தாகிவந்து செந்தூக்கியற்றாகி இற்ற வஞ்சிப்பா” (தொல். செய். சூ. 71, பேர்.)

11 - 7. பாடினி இழைபெறுதல், பாணன் பொற்றாமரை பெறுதல்: (கலித். 54 : 2, 85 : 2; புறநா. 12 : 1, 29 : 1 - 5, 69 : 4 - 21, 126 : 1 - 3, 319 : 9 - 15, 364 : 1 - 3) ; ‘‘எரியகைந் தன்ன வேடிறாமரை, சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி, நூலின் வலவா நுணங்கரின் மாலை, வாலொளி முத்தமொடு பாடினி யணிய” (பொருந. 159 - 62) , ‘‘தலைவன் றாமரை மலைய விறலியர், சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய” (மலைபடு. 569 - 70)

மு. ‘‘மகிழ்செய்தற்கட் காமம் நறவினும் சிறந்ததேயெனினும் இவள் குறிப்பு ஆராய்ந்தறியாமையின் யானது பெற்றிலேனெனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க, ‘அரிமயிர்த்திரண்முன்கை’ என்னும் புறப்பாட்டிற் குறிப்புப்போல” (குறள், 1090, பரிமேல்.)

(11)

12

பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி
இன்னா வாகப் பிறர்மண்கொண்
5டினிய செய்திநின் னார்வலர் முகத்தே.

திணை - அது; துறை - இயன்மொழி.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.