9-11. புறநா. 201 : 2 - 3. 9-12. பாரி முல்லைக்குத் தேர்கொடுத்தது: புறநா. 118 : 5, குறிப்புரை. 13. புறநா. 126 : 11, 201 : 7. 9-17. பெருங். 4. 15 : 23 - 80. (200) 201 | இவரியா ரென்குவை யாயி னிவரே ஊருட னிரவலர்க் கருளித் தேருடன் முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப் படுமணி யானைப் பறம்பிற் கோமான் | | 5 | நெடுமாப் பாரி மகளிர் யானே தந்தை தோழ னிவரென் மகளிர் அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச் செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை | | 10 | உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே விறற்போ ரண்ணல் தாரணி யானைச் சேட்டிருங் கோவே ஆண்கட னுடைமையிற் பாண்கட னாற்றிய | | 15 | ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் யான்றர விவரைக் கொண்மதி வான்கவித் திருங்கட லுடுத்தவிவ் வையகத் தருந்திறற் பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல் உடலுந ருட்குந் தானைக் | | 20 | கெடலருங் குரைய நாடுகிழ வோயே. |
திணையும் துறையும் அவை. பாரிமகளிரை இருங்கோவேளுழைக் கொண்டுசென்ற கபிலர் பாடியது. (இ - ள்.) இவர் யாரென்று வினவுவாயாயின், இவர்தாம், ஊரெல்லாவற்றையும் இரப்போர்க்கு வழங்கித் தேரை ஏறுதற்கேற்பச் சமைத்த அணையோடும் புரவியோடும் கூட முல்லைக்கு வழங்கிய தொலையாத நல்ல புகழையும் ஒலிக்கும் மணியையுடைய யானையையுமுடைய பறம்பிற்குத் தலைவனாகிய மிக்க பெரிய பாரியுடைய மகளிர்; யான் இவர் பிதாவின் தோழனாதலான் இவர் என்னுடைய மகளிர்; அந்தணனாகிய புலவன்யான் கொண்டு வந்தேன்; நீதான் வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தின்கட் டோன்றிச் செம்பாற் புனைந்துசெய்தாலொத்த சேய்மையை யுடைத்தாகிய நெடியமதிலையுடைய
|