துவராபதியென்னும் படைவீட்டை யாண்டுவெறுப்பில்லாத கொடையினையுடையராய் நாற்பத்தொன்பது தலைமுறைதொன்றுபட்டுவந்த வேள்களுள்வைத்து வேளாயுள்ளாய்!வென்றிப் போரையுடைய தலைவ! தாரணிந்த யானையினையுடையபெரிய இருங்கோவே! நீதான், ஆண்டன்மையைக் கடப்பாடாகஉடைமையாற் பாணர்க்குச் செய்யக்கடவ முறைமையைஉதவிய தழைத்த கண்ணியையுடைய புலிகடிமாலே! யான் நினக்குத்தரஇவரைக் கொள்வாயாக; வானாற் கவிக்கப்பட்டுப்பெருங்கடல் சூழ்தரப்பட்ட இவ்வுலகத்தின்கண் அணுகுதற்கரியவலியையுடைய பொன்னுண்டாகும் பெரிய மலைக்குத் தலைவ!வென்றிவேலையுடைத்தாகிய பகைவர் அஞ்சும் படையையுடையகேடில்லாத நாட்டுக்குரியவனே!-எ - று. உவராவீகைவேளிரெனக் கூட்டுக. ‘வடபான்முனிவன் றடவினுட் டோன்றி’ என்பதற்குக் கதையுரைப்பிற் பெருகும்; அதுகேட்டுணர்க. புலிகடிமாலென்பதுஇவனுக்கு ஒரு பெயர். வேளே! அண்ணல்! இருங்கோவே!புலிகடிமாஅல்! கிழவ! நாடு கிழவோய்! நீ இப்படிப்பட்டஉயர்ந்தகுடியிற் பிறந்தவனாதலால், யான்தர இவரைக்கொண்மதியெனக் கூட்டி வினைமுடிவு செய்க. யான் இவருடையதந்தைதோழனாதலானும் அந்தணனாதலானும் யான்தர நீஇவரைக் கோடற்குக் குறையில்லையென்பது கருத்து. (கு - ரை.) 1. புறநா. 13 : 1. 2. புறநா. 110 : 3 - 4. 4.படுமணி யானை : புறநா. 72, 165, 351; நற். 227. 2-5. புறநா. 200 : 9 - 12, குறிப்புரை. 8. தடவு :இச்சொல் தடமெனவும் வழங்கும்; திருச்சிற். 202, கொளு,பேர். உரையைப் பார்க்க; ‘‘தடத் தெரியை” (தக்க. 475) விசுவபுராணசாரமென்னும்தமிழ்நூலின் பதிகத்தில் 15-ஆம் செய்யுளில், ‘‘சம்புமாமுனிவன் வேள்வித் தழறரு மரபில் வந்தோன்” எனவும்,இரட்டையர்களருளிச்செய்த ஏகாம்பரநாதருலாவில், ‘‘சம்புகுலத்தொருவன்” எனவும் வந்திருத்தலின், இதில் ‘வடபான்முனிவன்’ என்றது அச்சம்பு முனிவனாக இருத்தல் கூடுமோவென்று ஊகிக்கப்படுகின்றது. 9. புறநா. 37 : 11, குறிப்புரை. 10-12.துவரை - மைஸுரைச்சார்ந்த துவாரஸமுத்திரமென்னும்நகரம்; இந்நகரில் அரசர் பதினெண்மரும் பதினெண்குடிவேளிரும்இருந்தனரென்றும், அவர்களை அகத்தியமுனிவர் அழைத்துப் போந்து பலஇடத்தும் தாபித்தன ரென்றும், அவர்களுள் இருங்கோவேள்சிற்றரசனென்றும் தெரிகின்றது; இதனை, ‘துவராபதிப்போந்துநிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும்பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும்.....கொண்டு போந்து’,மலையமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன்
|