பக்கம் எண் :

374

சொல்ல, என்னை எப்பரிசறிந்தான்பகைவரால் தடுத்தற்கரிய வேந்தன்? என்னை யழைத்துக்காணாதேதந்த இப்பொருட்கு யான் ஓர் ஊதியமே கருதும் பரிசிலனல்லேன்; விரும்பித்தினைத்துணையளவாயினும் நன்று, அந்தப் பரிசிலரதுகல்விமுதலாகிய பொருந்திய எல்லையையறிந்து கொடுத்து விடின்-எ - று.

ஈங்கனஞ்செல்கவென்றது, காணாதே அவன் சொல்லிவிட்டவார்த்தையை.

அவர்துணையளவறிந்துபேணி நல்கினர் விடின், தினையளவாயினும் இனிதெனக்கூட்டி வினைமுடிவு செய்க.

யான்தரங்கெடப் பொருள் கொடுபோமவன் அல்லேன்; அவனாயின் இதுவும்கொடுபோவன்; நீ எனக்கு தரமறிந்து தரவேண்டுமென்பதாம்.

‘அவர் துணையளவு’எனத் தம்மை உலகின்மேலிட்டுக் கூறினார்.

(கு - ரை.) 1-2. ‘‘சேட்சென்று,நல்குவார் கட்டே நசை” (நாலடி. 263)

9. புறநா. 121 : 3.

7-9. புறநா. 159 : 22 - 5, 205 : 1 - 2.

மு. பரிசில்நிலை கூறியதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 36, ந.

(208)

209

பொய்கை நாரை போர்விற் சேக்கும்
நெய்தலங் கழனி நெல்லரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி யவிழ்ந்த வாம்பல்
அகலடை யரியன் மாந்தித் தெண்கடற்
5படுதிரை யின்சீர்ப் பாணி தூங்கும்
மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந
பல்கனி நசைஇ யல்குவிசும் புகந்து
பெருமலை விடரகஞ் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரந் தீர்ந்தெனக் கையற்றுப்
10பெறாது பெயரும் புள்ளினம் போலநின்
நசைதர வந்துநின் னிசைநுவல் பரிசிலேன்
வறுவியேன் பெயர்கோ வாண்மேம் படுந
ஈயா யாயினு மிரங்குவே னல்லேன்
நோயிலை யாகுமதி பெரும நம்முட்
15குறுநணி காண்குவ தாக நாளும்
நறும்ப லொலிவருங் கதுப்பிற் றேமொழித்
தெரியிழை மகளிர் பாணி பார்க்கும்
பெருவரை யன்ன மார்பிற்
செருவெஞ் சேஎய்நின் மகிழிருக் கையே.