பக்கம் எண் :

373

வாயா வன்கனிக்கு உலமருவோர் யாரோ? நெஞ்சமே? உள்ளம் உள்ளவிந்தடங்காது யாளிபோல இனி எழுவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

வரிசையோர்க்கு யாளிபோல உள்ளம் உள்ளவிந்தடங்காதென முற்றாக்கி உரைப்பாரும் உளர்.

(கு - ரை.) 1. ‘‘எழுவினி வாழியென் னெஞ்சே” (குறுந். 11 : 4) வன்ன வருகா நோக்கமொடு” (பொருந. 77) ; ‘‘பருகு வன்ன நோக்கமொடு” (பெருங். 3. 7 : 80) ; ‘‘பருகுவ னன்ன வார்வத்த னாகி” (நன். பாயிரம்) ; ‘‘பருகுவான் போல நோக்கும்”, ‘‘பருகுவனள்போனோக்கி” (பாக. 4. துருவன்பதம். 35; 10. சகடமுதைத்த 21) ; ‘‘மலர்த்தடங் கண்ணே வாயாப், பருகுவான் போல நோக்கி” (கூர்ம. திருக்கல்யாண, 61)

7. இவ்வடியுடன், ‘‘காத மிருபத்து நான்கொழியக் காசினியை’ ஓதக் கடல்கொண் டொளித்ததோ-மேதினியிற், கொல்லிமலை தேன் சொரியுங் கொற்றவா நீமுனிந்தால், இல்லையோ வெங்கட் கிடம்” (கம்பர் பாடல்) என்பது ஒப்புநோக்கற்பாலது.

8. ‘‘ஆளி நன்மா னணங்குடைக் குருளை, மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி” (பொருந. 139 - 40)

11, ‘‘நற்றோண் மருவரற் குலமரு வோரே” (ஐங்குறு. 464)

(207)

208

குன்று மலையும் பலபின் னொழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென
நின்ற வென்னயந் தருளி யீதுகொண்
டீங்கனஞ் செல்க தானென வென்னை
5யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்
காணா தீத்த விப்பொருட் கியானோர்
வாணிகப் பரிசில னல்லேன் பேணித்
தினையனைத் தாயினு மினிதவர்
துணையள வறிந்து நல்கினர் விடினே.

திணையும் துறையும் அவை.

அதியமான் நெடுமானஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது இதுகொண்டுசெல்கென்று அவன் பரிசில்கொடுப்பக் கொள்ளாது அவர் சொல்லியது.

(இ - ள்.) குன்றுகளும் மலைகளும் பல பின்கழிய வந்தேன் யான் பரிசில்கொண்டேனாய்ப் போதற்கெனச் சொல்லி நின்றவென்னை அன்புற்றருளி இப்பொருளைக் கொண்டு இவ்வாறு போக,தானெனச்