(கு - ரை.) 1. போர்வு - நெற்கதிர்ப்போர்; ‘‘கயலார் நாரை போர்விற் சேக்கும்” (ஐங்குறு. 9) 2. தொழுவர் - தொழில் செய்யும் உழவர். புறநா. 24 : 1; ‘‘நெல்லரி தொழுவர்” (நற். 195) 3. மு. புறநா. 383 : 7; ‘‘ஆம்ப லாயிதழ் கூம்புவிட்” (குறிஞ்சிப். 223) 6. மு. புறநா. 42 : 18. 8. புறநா. 91 : 8. 7. அல்குதல் - தங்குதல். 9. கை, செய்வதென்னும் பொருளில் வந்ததற்கு மேற்கோள்; குறள், 925, பரிமேல். 12, வினையெச்சத் தன்மைவினைக்குறிப்பு முற்றுக்கு மேற்கோள்; தொல். எச்ச. சூ. 61. ந.) 14. புறநா. 205 : 9. 19. இருக்கை - நாளோலக்கம். காலைப்பொழுதில் தன்னையாவரும் எளிதிற் காணும்படி அரசன் வீற்றிருக்குமிடம். (209) 210 | மன்பதை காக்குநின் புரைமை நோக்கா தன்புகண் மாறிய வறனில் காட்சியொடு நும்ம னோருமற் றினைய ராயின் எம்ம னோரிவட் பிறவலர் மாதோ | | 5 | செயிர்தீர் கொள்கை யெம்வெங் காதலி உயர்சிறி துடைய ளாயி னெம்வயின் உள்ளா திருத்தலோ வரிதே யதனால் அறனில் கூற்றந் திறனின்று துணியப் பிறனா யினன்கொ லிறீஇயரென் னுயிரென | | 10 | நுவல்வுறு சிறுமையள் பலபுலந் துறையும் இடுக்கண் மனையோ டீரிய விந்நிலை விடுத்தேன் வாழியர் குருசி லுதுக்காண் அவல நெஞ்சமொடு செல்வனிற் கறுத்தோர் அருங்கடி முனையரண் போலப் | | 15 | பெருங்கை யற்றவென் புலம்புமுந் துறத்தே. |
திணையும் துறையும் அவை. சேரமான் குடக்கோச்சேரலிரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது, (இ - ள்.) உயிர்ப்பன்மையைக்காக்கும் நினது உயர்ச்சியைப் பாராது காதல் கண்மாறிய அறமில்லாத பார்வையுடனேகூடி நும்போல்வார் யாவரும் இதற்கு ஒத்த அறிவையுடையராய் அருள்மாறுவாராயின் எம்போல்வார் இவ்வுலகத்துப் பிறவாதொழியக்கடவர்;
|