பக்கம் எண் :

379

உணவில்லாமையான் இடந்தோறும் இடந்தோறும் மாறிமாறிஅகழ்தலால் இல்லெலி மடிந்த பழையசுவராகிய எல்லையையுடைய,பாலில்லாமையாற் பலபடி சுவைத்து முலையுண்டலை வெறுத்த பிள்ளையுடனேமனையின்கண்ணே வறுமையுற்றிருந்த என்னுடைய ஒளிபொருந்தியநுதலையுடையாளை நினைந்து-எ - று.

தோன்றல்! நின் உள்ளிவந்த பரிசிலேனாகிய நான் கூற, நின் உள்ளியது செய்தாயாதலான்வருத்தங் கூறி ஏத்தித் தொழுதனென் பழிச்சி வரைப்பின்மனைக்கண்ணே புதல்வனொடு தொலைந்திருந்த என் வாணுதலைநினைந்துசெல்வல் யானெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

நாணக்கூறியென்றதன்பின்னேஏத்திப் பழிச்சிச் செல்வலென் றமையான், அவை குறிப்புமொழி.வரைப்பின் மனையெனஇயையும்.

‘வள்ளிய னாகலின்வணங்குவ னிவனென’ என்று பாடமாயின், வண்மையையுடையனாதலால்இவன் எமக்குத் தாழ்ந்து பரிசிலளிப்பனெனக் கருதியென்க.

‘வள்ளியையாகலின் வணங்குவ னிவனெனக், கொள்ளா மாந்தர் கொடுமை கூற’என்றதற்கு வள்ளியையாதலின் இவனை வணங்குவேனென நினைந்துவணங்க அதுபாராது நின்பாற் பரிசில் பெறாத மாந்தர்..
தூவவெறியுமென்பது,தூவெறியுமென வகரங்கெட முடிதல் புறநடையாற்கொள்க;விகாரமெனினும் அமையும்.

‘தூவவெறியும்’என்பதூஉம் பாடம்.

புறநிலை என்பதற்குப்புறங்கடை நின்றநிலையென்றுமாம்.

‘இல்லெலிமடிந்த தொல்சுவர்’ என்பதற்கு இல்லெலிதான் தொழில்மடிந்த தொல்சுவரென்று உரைப்பினும் அமையும்.

நின்னைக்கொடுமை கூறவென்று உரைப்பினும் அமையும்.

(கு - ரை.) 1-4. புறநா. 17 : 38 - 9, குறிப்புரை; 373 : 20 - 21; ‘‘உருமெறிந்தெங்கும், பெருமலைதூவெறிந் தற்றே” (களவழி. 6) ; கலித். 45 : 5.

6. கலித். 105 : 1.

16. மார்பு தொழுதுபழிச்சுதல் : புறநா. 155 : 8; பரி. 13 : 12 - 3.

20-21. புறநா. 164 : 3 - 5.

(211)

212

நுங்கோ யாரென வினவி னெங்கோக்
களமர்க் கரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கிற் காமம் வீட வாரா
ஆரற் கொழுஞ்சூ டங்கவு ளடாஅ
5வைகுதொழின்மடியு மடியா விழவின்