| 5 | முரசெழுந்திரங்குந் தானையொடு தலைச்சென் றரைசுபடக்கடக்கு முரைசா றோன்றனின் உள்ளி வந்தவோங்குநிலைப் பரிசிலென் வள்ளியை யாதலின்வணங்குவ னிவனெனக் கொள்ளா மாந்தர் கொடுமைகூறநின் | | 10 | உள்ளியதுமுடித்தோய் மன்ற முன்னாட் கையுள் ளதுபோற் காட்டிவழிநாட் பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் நாணா யாயினுநாணக் கூறியென் நுணங்கு செந்நா வணங்க வேத்திப் | | 15 | பாடப்பாடப் பாடுபுகழ் கொண்டநின் ஆடுகொள் வியன்மார்புதொழுதனென் பழிச்சிச் செல்வ லத்தை யானே வைகலும் வல்சியின்மையின் வயின்வயின் மாறி இல்லெலிமடிந்த தொல்சுவர் வரைப்பிற் | | 20 | பாஅலின்மையிற் பல்பாடு சுவைத்து முலைக்கோண்மறந்த புதல்வனொடு மனைத்தொலைந் திருந்தவென்வாணுதற் படர்ந்தே. |
(பி - ம்.) 10 ‘உள்ளியதுசெய்தோய்’ 22 ‘மனைத்தொலைஇந்திருந்த’ திணையும் துறையும் அவை. அவனைஅவர் பாடியது, (இ - ள்.) அஞ்சத்தக்கமுறைமையையுடைய வெய்ய சினத்தையுடைய மழையின்கண் உள்ளஇடியேறு, அச்சமுடைய பாம்பினது அணுகுதற்கரிய தலை துணிய,நிலவகலத்தை நின்றுபார்ப்பதுபோன்ற நீண்டமலைபிறழச் சிறுமலைதூவ எறியும் ஓசைபோல வீரமுரசுகிளர்ந்தொலிக்கும் படையுடனே மேற்சென்று வேந்தர் படஎதிர் நின்றுகொல்லும் புகழமைந்த தலைவ! நீ வள்ளியையாதலால்எமக்குத் தாழ்ந்து பரிசில் நல்குவன் இவனென்றுநின்னைநினைந்துவந்த உயர்ந்த நிலைமையையுடைய பரிசிலேனாகிய யான்நினக்கு எம்மை எதிரேற்றுக்கொள்ளா மாந்தரது கொடுமையைச்சொல்லவும் நின்னுடைய நினைவேசெய்தாய், நிச்சயமாக;முன்னைநாட் பரிசில் கையிலே புகுந்ததுபோலக் காட்டிப்பிற்றைநாட் பொய்யைப் பெற்றுநின்ற நினது புறநிலைமைக்கு யான்வருந்தியவருத்தத்திற்கு நீதான் நாணாயாயினும் நீ நாணச்சொல்லி எனது நுண்ணிய ஆராய்ச்சியையுடைய செவ்விய நாவருந்தப் புகழ்ந்து நாடோறும் பாடப் பாடப் பின்னரும்பாடவேண்டும் புகழை ஏற்றுக்கொண்ட நினது வென்றிபொருந்திய அகன்றமார்பை வணங்கி வாழ்த்திப்போவேன் யான்; நாடோறும்
|