பக்கம் எண் :

381

நினையுங் காலை நீயுமற்றவர்க்
கனையை யல்லை யடுமான் றோன்றல்
பரந்துபடுநல்லிசை யெய்தி மற்றுநீ
10உயர்ந்தோ ருலகமெய்திப் பின்னும்
ஒழித்த தாய மவர்க்குரித்தன்றே
அதனால், அன்ன தாதலு மறிவோய் நன்றும்
இன்னுங்கேண்மதி யிசைவெய் யோயே
நின்ற துப்பொடு நிற்குறித்தெழுந்த
15எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின்
நின்பெருஞ்செல்வம் யார்க்கெஞ் சுவையே
அமர்வெஞ் செல்வநீயவர்க் குலையின்
இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே
அதனால்,ஒழிகதி லத்தைநின் மறனே வல்விரைந்
20தெழுமதிவாழ்கநின் னுள்ள மழிந்தோர்க்
கேம மாகுநின்றாணிழன் மயங்காது
செய்தல் வேண்டுமா னன்றே வானோர்
அரும்பெற லுலகத்தான்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்தெதிர்கொளற்கே.

(பி - ம்.) 24 ‘விதுப்புறு’

திணை -வஞ்சி; துறை - துணைவஞ்சி.

அவன்மக்கண்மேற் சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார்(பி - ம்.எயிற்றியார்) பாடியது.

(இ - ள்.) மடுத்தெழுந்தபோரின்கட் கொன்ற மிகுதிபொருந்திய வலியமுயற்சியையுடையவெண்கொற்றக்குடையான் உலகத்தை நிழல் செய்து புகழால் விளக்கும்வென்றியையுடைய வேந்தே! கிளர்ந்த நீரையுடைய கடலாற்சூழப்பட்ட இப்பரந்தவிடத்தையுடைய உலகத்தின்கண்நின்னிடத்துப் போர்செய்யவந்த இருவரையும் கருதின்,பழையதாய்த் தங்கப்பட்ட வலியை யுடைய நின் பகைவேந்தராகியசேரபாண்டியருமல்லர், போரின்கண் விரும்பிய காட்சியுடனேநின்னொடு பகையாய் வேறுபட்டெழுந்த அவ்விருவர்தாம்;நினையுங்காலத்து நீயும் அவர்க்கு அத்தன்மையையாகியபகைவனல்லை; பகையைக் கொல்லும் யானையினையுடைய தலைவ! நீபரந்துபட்ட நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தித்தேவருலகத்தின்கட் போய்ப் பின்பு நீ ஒழித்தஅரசாட்சியுரிமை அவர்க்குரித்து; ஆதலால், அப்பெற்றித்தாதலும்அறிவோய்! பெரிதும் இன்னமும் கேட்பாயாக; புகழை விரும்புவோய்;நிலைபெற்ற வலியோடு நின்னைக் கருதிப் போர்செய்தற்குஎழுந்திருந்த சூழ்ச்சியில்லாத அறிவையுடையநின்புதல்வர் தோற்பின் நினது பெரிய செல்வத்தைஅவர்க்கொழிய