பக்கம் எண் :

387

(பி - ம்.) 7 ‘பாலாரா குகவே’

திணையும் துறையும் அவை.

பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் (பி - ம். பிசிராந்தையாரைக் கண்ட நத்தத்தனார்) பாடியது.

(இ - ள்.) பொன்னும் பவளமும் முத்தும் நிலைபெற்ற பெரிய மலை தரப்பட்ட விரும்பத்தக்க மணியும் ஒன்றற்கொன்று இடைநிலம்படச் சேய் நிலத்தினவாயினும் கோவைபொருந்தி அரிய விலையினையுடைய நல்ல அணிகலங்களைச் செய்யுங்காலத்து ஓரிடத்துத் தோன்றினாற்போல எந்நாளும் அமைந்தோர் அமைந்தோர்பக்கத்தராவார்; அமைதியில்லார் அமைதியில்லார் பக்கத்தராவர்-எ - று.

சான்றோர்குழுவினைப் புகழுங்கருத்தாகலின், அவர்க்கேற்ற உவமம் கூறினார்; சாலாதார்க்கும் ஏற்றவுவமம் வருவித்துக்கொள்க.

தொடைபுணர்ந்து தோன்றியாங்கென இயையும்.

(கு - ரை.) 1. பெருங். 4. 17 : 75.

‘தன்னின முடித்த லென்பதனால், பொன்னுந் துகிருமுத்து.....மணியும் என எண்ணுங்காலும் இனமாயபொருளே எண்ணப்படுமென்பது கொள்க.’ (தொல். கிளவி. சூ. 16, இளம். சே., கல்.)

2. ‘‘கல்லிற் பிறக்குங் கதிர்மணி” (நான்மணிக். 7) ; ‘‘மலையிடைப் பிறவா மணியே யென்கோ” (சிலப். 2 : 77)

4. பெருங். 4. 2 : 82.

5-6. ‘‘பண்காணுந் தமிழ்ப்புலவீ ரினத்தொடே யினஞ்சேரும் பரிசே போல” (தனிப்பாடல்) ; ‘‘நற்றா மரைக்கயத்தி னல்லன்னஞ் சேர்ந்தாற்போற், கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” (மூதுரை, 24)

(218)

219

உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூஉவள்ளுர முணக்கு மள்ள
புலவுதி மாதோ நீயே
பலராலத்தைநின் குறியிருந் தோரே.

திணையும் துறையும் அவை.

அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப்பூதநாதனார் பாடியது.

(இ - ள்.) யாற்றிடைக் குறையுட் புள்ளிப்பட்ட மரநிழற்கண் இருந்து உடம்பாகிய முழுத்தசையை வாட்டும் வீர! நின் கருத்திற்கேற்ப நின்னோடு வடக்கிருந்தார் பலராதலான், யான் இதற்கு உதவாது பிற்பட வந்ததற்கு என்னை அவரோடு சொல்லி வெறுத்தி நீ-எ - று.

யான் பிற்பட வந்ததற்கு என்னைப் புலந்து என்னோடு சொல்லாடா திருந்தாய் நீயென்றும்,இவனுடனே வடக்கிருந்தோர்களும்