பக்கம் எண் :

388

எதிரேற்றுக் கொள்ளாமைநோக்கி நின்குறிப்பிற்குஏற்பப் புலந்தார் பலரென்றும் உரைப்பினும் அமையும்.

‘உள்ளாற்றுக்கவலை’என்பதற்கு வழிக்குள்ளாகிய நாற்றிசையும் கூடியஇடமென்றுமாம்; கவர்த்தவழிக்குள்ளென்றுரைப்பாரும்உளர்.

1அரசுதுறந்து வடக்கிருந்துஉயிர்நீத்த உள்ளமிகுதியான் மள்ள வென்றார்.

(கு - ரை.) 1. ‘‘செல்லாற்றுக் கவலை” (குறுந். 263: 2) ; ‘‘கனையெரிநிகழ்ந்த விலையி லங்காட், டுழைப்புறத் தன்ன புள்ளிநீழல்” (அகநா. 379 : 19 - 20)

2. புறநா. 320 : 13.

(219)

220

பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களி றிழந்த பைதற் பாகன்
அதுசேர்ந் தல்கிய வழுங்க லாலை
வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக்
5கலங்கினே னல்லனோ யானே பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே.

(பி - ம்.) 2 ‘இருங்களி’

திணையும் துறையும் அவை.

அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டுவந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.

(இ - ள்.) பெரிய சோற்றையுண்டாக்கிப் பல்யாண்டு பாதுகாத்த பெரிய களிற்றை இழந்த வருத்தத்தினையுடைய பாகன் அவ்வியானை சேர்ந்து தங்கிய இரக்கத்தையுடைய கூடத்தின்கட் கம்பம் வறிதே நிற்கப் பார்த்துக் கலங்கின தன்மைபோல யான் இறந்துபடுதலின்றிக் கலங்கினேனல்லனோ? பொன்னான் இயன்ற மாலையையுடைய தேர்வண்மையைச் செய்யும் கிள்ளி போகப்பட்ட பெரிய புகழினையுடைய பழைய உறையூரின் மன்றத்தைப் பார்த்து-எ - று.

மூதூர்மன்றங் கண்டு கலங்கினேனல்லனோவெனக் கூட்டுக.

மன்றம் - ஈண்டுச் செண்டுவெளி.

அழுங்கல் - முன்புள்ள ஆரவாரமுமாம்.

இறந்தவென்று சொல்லுதல் இன்னாமையால் போகியவென்றார்.

(கு - ரை.) 1. பெருஞ்சோறு : புறநா. 2 : 16, 235 : 5.


1.‘‘திறைமன்ன ருய்ப்பத் திருநிற்பச் செங்கோ னடப்பக், குறைவின்றிக் கொற்ற முயரத் தெவ்வர் தேர்பணிய, உறைகின்ற காலத்தறங்கேட் டுருமுற்ற பாம்பின், அறிவன் னடிக்கீ ழரசஞ்சித் துறந்தவாறும்” (சீவக. 27)