இப்படி வேறுபட்ட தன்மையை யுடையையாதலின்,நினக்கு யான் பொருந்தினேனல்லாமையான் ; இங்ஙனம்பொருந்திற்றிலே னாயினும் இப்பிறப்பின் கண் நீயும்யானுங்கூடி இன்புற்றிருந்தவாறு போலக் காட்டி மறுபிறப்பினும்இடைவிடாத காட்சியினையுடைய நின்னோடு கூடிவாழ்தலைஉயர்ந்த விதி கூட்டுவதாக...எ - று. உலந்த யாண்டு’ என்று பாடமாயின், கழிந்த யாண்டென்க. மற்று: அசைநிலை. (கு - ரை.) 1.‘’முழவன பலவின் றீங்கனி” (சீவக. 825) 2. ‘’அரிப்பறை வினைஞ ரல்குமிசைக் கூட்டும்” (ஐங்குறு. 81) (236) 237 | நீடுவாழ் கென்றியா னெடுங்கடை குறுகிப் பாடி நின்ற பசிநாட் கண்ணே கோடைக் காலத்துக் கொழுநிழ லாகிப் பொய்த்த லறியா வுரவோன் செவிமுதல் | | 5 | வித்திய பனுவல் விளைந்தன்று நன்றென நச்சி யிருந்த நசைபழு தாக அட்ட குழிசி யழற்பயந் தாஅங் களியர் தாமே யார்க வென்னா அறனில் கூற்றந் திறனின்று துணிய | | 10 | ஊழி னுருப்ப வெருக்கிய மகளிர் வாழைப் பூவின் வளைமுறி சிதற முதுவா யொக்கற் பரிசில ரிரங்கக் கள்ளி போகிய களரியம் பறந்தலை வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே | | 15 | ஆங்கது நோயின் றாக வோங்குவரைப் புலிபார்த் தொற்றிய களிற்றிரை பிழைப்பின் எலிபார்த் தொற்றா தாகு மலிதிரைக் கடன்மண்டு புனலி னிழுமெனச் சென்று நனியுடைப் பரிசிற் றருகம் | | 20 | எழுமதி நெஞ்சே துணிபுமுந் துறுத்தே. |
திணையும் துறையும் அவை. வெளிமானுழைச் சென்றார்க்கு அவன் துஞ்ச இளவெளிமான் சிறிது கொடுப்பக் கொள்ளாது பெருஞ்சித்திரனார் பாடியது, (இ - ள்.) நெடுங்காலம் வாழ்வாயாகவென்று யான் நெடிய வாயிலை அணுகிப் பாடிநின்ற பசியையுடைய காலத்தின்கண்ணே,கோடையான் வெம்மையுற்றபொழுதின்கண் அடைந்தார்க்குக்கொழுவிய நிழலையொத்து யார்கண்ணும் பொய்கூறுதல்அறியாத
|