பக்கம் எண் :

408

ஐஞ்சீரான் வந்தன; இரண்டாம் அடியும்பதினொன்றாம் அடியும் அறுசீரான் வந்தன; ஏனைய நான்குசீரான் வந்தன; இவ்வாறு வருதலின் அடி மயங்காசிரியமாயிற்று’ (தொல்.செய். சூ. 112, இளம்.) ; ‘சிறியகட் பெறினே...பலவே:இதனுள், நரந்த நாறுந்தன்கையால் எனவும், அருநிறத்தியங்கிய வேலே எனவும் தனித்து வந்தன; பெரியகட்பெறினே என்பது சொற்சீரடி; இதனைக் குறளடியாக்கிக் குறளடியும்வருமென்பர் பின்பு நூல்செய்த ஆசிரியர்’ (தொல்.செய். சூ. 69, .) ; ‘சிறிய கட் பெறினே... ...பலவே:இதனுள் இருசீரும் முச்சீரும் இடையிடையே வந்தன’ (யா. வி. சூ. 19; யா. கா.செய். சூ. 3) ; ‘சிறிய கட்பெறினே யென்னும்இணைக் குறளாசிரியப் பாவினுள் ஐஞ்சீரடியும் அருகிவந்தனவெனக்கொள்க’ (யா. வி. செய். சூ. 40) ; ‘இருசீரடியும்முச்சீரடியும் இடையிடை வந்த இணைக்குறளாசிரியப் பாவிற்குச்செய்யுள்:-சிறிய கட்பெறினே......பலவே’ (இ. வி.சூ. 734, உரை) ;இளம்பூரணர் கொண்ட பாடப் பகுதி அகப்படாமையால்,இச் செய்யுளை அவர் கருத்தின்படி 17 - அடியாகப்பிரித்தற்கு இயல வில்லை.

(235)

236

கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்
சிலைகெழு குறவர்க் கல்குமிசை வாகும்
மலைகெழு நாட மாவண் பாரி
கலந்த கேண்மைக் கொவ்வாய் நீயெற்
5புலந்தனை யாகுவை புரந்த யாண்டே
பெருந்தகு சிறப்பி னட்பிற் கொல்லா
தொருங்குவரல் விடாஅ தொழிகெனக் கூறி
இனையை யாதலி னினக்கு மற்றியான்
மேயினே னன்மை யானே யாயினும்
10இம்மை போலக் காட்டி யும்மை
இடையில் காட்சி நின்னோ
டுடனுறை வாக்குக வுயர்ந்த பாலே.

திணை - அது; துறை - கையறுநிலை.

வேள்பாரி துஞ்சியவழி அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது.

(இ - ள்.) முசுக்கலை கிழித்துண்டலாற் பீறிய முழவுபோலும் பெரிய பலாப்பழம் வில்லையுடைய குறவர்க்கு அதன்பெருமையாற் சில நாளைக்கு இட்டுவைத்துண்ணும் உணவாகும் மலையுடைய நாட்டை யுடையோய்! பெரிய வண்மையையுடைய பாரி! நீயும் யானுங்கலந்த நட்பிற்குப் பொருந்த ஒழுகாயாய் நீ என்னை வெறுத்தாயாகக் கடவை, நீ எனக்கு உதவிசெய்த யாண்டுகளும், பெருமைதக்க தலைமையினையுடைய நட்பிற்குப் பொருந்தாமல் யானும் நின்னோடு கூடப் போதுதற்கு இயையாது நீஈண்டுத் தவிர்கவெனச் சொல்லி