6 - 7. ஆசிரியத்துள் ஐஞ்சீரடி அருகிவந்ததற்கு மேற்கோள்; யா. வி.ஒழிபு. சூ. 2. 8 - 9. ‘நரந்தநாறும்...தைவருமன்னே: எனமுச்சீரடி இடையும் ஒன்று வந்ததாலெனின், தோற்றமென்றதனான் எருத்தடிமுச்சீராய காலத்துக் குட்டம் பட்டும் இனிது விளங்கும்’, ‘நரந்தநாறும்...மன்னே:என்றவழி எண்சீராதலான் இரண்டு நாற்சீரடி வந்தனவென்று கோடுமன்றே தூக்கின்றாயி னென்பது’ (தொல். செய். சூ. 69, 87, பேர்.) 1 - 9. ‘இதுபலவற்றின் நிலையாமைகூறி இரங்குதலின் மன்னைக் காஞ்சி எனவேறு பெயர் கொடுத்தார்; இது பெரும்பான்மை மன் என்னும்இடைச்சொற்பற்றியே வருமென்றற்கு மன் கூறினார்...சிறியகட்பெறினே...மன்னே: என இப்புறப்பாட்டு மன் அடுத்துஅப்பொருள் தந்தது’ (தொல். புறத்திணை. சூ. 24, ந.) 2 - 9. ‘இருசீர்முதல்ஐஞ்சீர்காறும் பரந்து பட்ட அகவலோசையை, பெரியகட்பெறினே எனச் சொற்சீரடியாகவும், யாம்பாடத்தான்மகிழ்ந் துண்ணு மன்னே என அளவடியாகவும், நரந்தநாறுந் தன் கையால் எனச் சிந்தடியாகவும், சிறுசோற் றானுநனிபல கலத்தன் மன்னே என நெடிலடியாகவும் தூக்குத்துணிந்தவாறு காண்க;இங்ஙனம் தூக்கின்றென, நரந்த நாறுந் தன்கையாற் புலவு, நாறுமென்றலை தைவரு மன்னே என்றதனை இரண்டு நாற்சீரடியாகஅலகிட அகவலோசை பிறவாமை யுணர்க’ (தொல்.செய். சூ. 87, ந.) 12. புரப்போர்:செயப்பாட்டு வினையாலணையும் பெயர். 16.மு. புறநா. 307: 1; குறுந். 176:5, 325 : 4. கொல்என்னும் இடைச்சொல் இரக்கங்குறித்து வந்ததற்கு மேற்கோள்; நன். சூ. 420, மயிலை. 18.பகன்றை: புறநா. 16: 14; “பனித்துறைப் பகன்றைப்பாங்குடைத் தெரியல்” (பதிற். 76: 12) 18 - 9. “அள்ளிக்கொள்வன்ன குறுமுகிழ வாயினும், கள்ளிமேற் கைந்நீட்டார்சூடும்பூ வன்மையால்“ (நாலடி. 262) 20. ‘தவ’என்னும் உரிச்சொல் மிகுதியாகிய குறிப்பை யுணர்த்துவதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 93, சே.; ந. இ. வி. சூ. 281, 287, உரை 18 - 20. “பெய்யாதுவைகிய கோதை போல, மெய்சாயினை“ (நற். 11: 1 - 2) மு.காஞ்சித்திணைத்துறைகளுள் ‘இன்னனென் றிரங்கியமன்னை’ என்பதற்கு மேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 19.இளம்.) ; ‘சிறிய கட் பெறினே... ...தவப் பலவே: இப்பதினேழடிஆசிரியத்துள் ஏழாமடியும் பன்னிரண்டாமடியும் முச்சீரான்வந்தன;மூன்றாம் அடி முதலாக ஆறாம் அடி யீறாக நான்கடியும்பதினாலாம் அடியும்
|