இரப்பவர் கையுளும் தைத்துருவித் தன்னாற் புரக்கப்படும்சுற்றத்தாரது புல்லிய கண்ணிற்பாவை ஒளிமழுங்க அழகியசொல்லை ஆராயும் நுண்ணிய ஆராய்ச்சியையுடைய அறிவினையுடையோர் நாவின்கண்ணே போய் வீழ்ந்தது, அவனது அரிய மார்பத்தின்கண்தைத்த வேல்; எமக்குப் பற்றாகிய எம்மிறைவன் எவ்விடத்துள்ளான்கொல்லோ? இனிப் பாடுவாரும் இல்லை; பாடுவார்க்குஒன்றீவாரும் இல்லை; குளிர்ச்சியையுடைய நீரையுடையதுறையின்கட் பகன்றையினது தேனைப் பொருந்திய பெரியமலர் பிறராற் சூடப்படாது கழிந்தாற்போலப் பிறர்க்கு ஒருபொருளைக் கொடுக்காது மாய்ந்துபோம் உயிர் மிகப்பல-எ - று. அவன்நிறத்து உருவியவேல் அவனுக்கு இறந்துபாட்டைச் செய்த லோடே பாணர்முதலாயினார்க்கும் இறந்துபாட்டினைச் செய்தலான் ஒருகாலத்தே யாவரிடத்தும் தைத்ததென்றாராகக் கொள்க. மன்கழிவின்கண் வந்தது. (கு - ரை.) 1. ‘மன்’என்னும் இடைச்சொல் கழிவின்கண் வந்ததற்கு மேற்கோள் (தொல்.இடை. சூ. 4. இளம். சே. தெய்வச். கல். ந., நன். சூ. 431, மயிலை.; நன். வி.சூ. 432; இ. வி. சூ. 263, உரை) ; ‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே யென்புழி மன்னைச்சொல்இனி அது கழிந்ததென்னும் பொருள்குறித்து நின்றதுகாணென்றாற் பொருளுண ராதானை அரிதாகப் பெற்ற கள்ளைஎக்காலமும் எமக்குத் தருகின்றவன் துறக்கத்துச் சேறலின்எமக்குக் கள்ளுண்டல் போயிற்றென்றல் இதன் பொருளெனத்தொடர்மொழிகூறிப் பொருளுணர்த்துக’ (தொல்.உரி. சூ. 94, ந.) ; ‘சிறியகட் பெறினே யெமக்கீயுமன்னே யென்றது உளப்பாட்டுத் தன்மையும் படர்க்கையும்பற்றிவந்தது’ (தொல். எச்ச. சூ. 49,ந.) ; ஒரூஉவண்ணத்திற்கும் (தொல்.செய். சூ. 288, பேர்.) , அளவடிக்கும் (தொல். செய். சூ. 38, ந.) மேற்கோள். 2. ‘பெரியகட்பெறினே : என இருசீரடிவந்ததாலெனின், அதனைச் சொற்சீரடியென்று களைக’, ‘பெரியகட்பெறினே : என்பது சொற்சீராகி அகவலுட்பயிலாது வந்தது’ (தொல்.செய். சூ. 69, 215, பேர்.) 1 - 2.ஒரூஉவண்ணத்திற்கு மேற்கோள் ; தொல். செய். சூ. 227, ந. 1 - 3. ‘சிறியகட்பெறினே யெமக்கீயு மன்னே: என்பதன்கண் முதலடி நாற்சீரான்வந்தது; இரண்டாமடி ஆசிரியத்தளையொடு பொருந்திஅறுசீரடியாகி வந்தது’ (தொல். செய். சூ. 60, இளம்.) 4.நெடிலடிக்கு மேற்கோள்; தொல். செய். சூ. 38, ந. 4 - 5. ‘சிறுசோற்றானும்... ...கலத்தன்மன்னே:என்பன ஐஞ்சீரான் வந்த ஆசிரியவடி’ (தொல்.செய். சூ. 63, பேர்.) 4 - 7. ‘சிறுசோற்றானுநனிபல கலத்தன் மன்னே: என்பது முதலாக நான்கடி ஆசிரியத்துள்ஐஞ்சீரடுக்கி வந்தன’ (தொல். செய். சூ. 63, ந.)
|