பக்கம் எண் :

411

5காடுமுன் னினனேகட்கா முறுநன்
தொடிகழி மகளிரிற் றொல்கவின் வாடிப்
பாடுநர்கடும்பும் பையென் றனவே
தோடுகொண் முரசுங்கிழிந்தன கண்ணே
ஆளில், வரைபோல் யானையுமருப்பிழந் தனவே
10வெந்திறற்கூற்றம் பெரும்பே துறுப்ப
எந்தை யாகுல வதற்படலறியேன்
அந்தோ வளியேன் வந்தனென் மன்ற
என்னாகுவர்கொலெற் றுன்னி யோரே
மாரி யிரவின்மரங்கவிழ் பொழுதின்
15ஆரஞ ருற்றநெஞ்சமொ டொராங்குக்
கண்ணி லூமன் கடற்பட் டாங்கு
வரையளந்தறியாத் திரையரு நீத்தத்
தவல மறுசுழி மறுகலிற்
றவலேநன்றுமற் றகுதியு மதுவே.

(பி - ம்.) 11 'யாகுதலதற்பட'

திணையும் துறையும் அவை.

வெளிமான்துஞ்சியபின் அவர் பாடியது.

(இ - ள்.) பிணமிட்டுப்புதைக்கப்பட்ட கவிக்கப்பட்ட செய்ய தாழியினது குவிந்தபுறத்தேயிருந்த செவி சிவந்த கழுகின்சேவலும் பொகுவலென்னும்புள்ளும் அஞ்சாவாய் வாய்வலிய காக்கையும் கோட்டானும் கூடிப் பேயினத்துடனே தாம் விரும்பியவழியேஇயங்கும் சுடு காட்டைத் தலைப்பட்டான், வீரபானத்தைக்காமுறுவான்; அவனுடைய வளைகழிக்கப்பட்ட உரிமை மகளிரைப்போலப் பழையஅழகு தொலைந்து பாடுவாரது சுற்றமும் ஒளிமழுங்கின; தொகுதிகொண்டமுரசங்களும் கண்கிழிந்தன; பாகர்முதலாயின ஆளில்லாதமலைபோன்ற யானைகளும் மருப்பிழந்து விட்டன; இவ்வாறுவெவ்விய திறலையுடைய கூற்றம் பெரிய இறந்துபாட்டைஎய்துவிப்ப என் இறைவன்........அவ்விறந்து பாட்டிலே படுதலைஅறியேனாய் ஐயோ! அளித்தலையுடையேன் வந்தேன்;நிச்சயமாக என்ன துயரமுறுவர்கொல்லோ என்னையடைந்தசுற்றத்தார்? மழையையுடைய இரவின்கண் மரக்கலம்கவிழ்ந்தகாலத்துப் பொறுத்தற்கரிய துன்பமுற்றநெஞ்சுடனே ஒருபெற்றிப்படக் கண்ணில்லாத ஊமன்கடலின்கண் அழுந்தினாற்போல எல்லையளந்தறியப்படாததிரையரிதாகிய வெள்ளத்தின்கண் துன்பமாகியமறுசுழியின்கட் பட்டுச் சுழலுமதனின் இறந்துபடுதலேநன்று; நமக்குத் தக்க செய்கையும் அதுவே-எ - று.

யான் அதுசெய்யப்பெற்றிலேனென்னும் நினைவிற்று.