லுள்ளே போர்த் தலுற்ற முரசம் முழங்க வானத்தின்கண்ஓசை தோன்றிற்று- எ - று. இப்பெற்றிப்பட்டவள்ளியோனைவானோர் எதிர்கோடல் தப்பா தென்றவாறு. இது தற்குறிப்பேற்றமென்பதோர்அணிப்பொருட்டாய் நின்றது. (கு - ரை.) 3 - 4. ‘’வச்சிரக்கோட்டத்துமணங்கெழு முரசம்” (மணி. 1 :27) (241) 242 | இளையோர் சூடார் வளையோர் கொய்யார் நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி யணியாள் ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த | | 5 | வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே. |
(பி - ம்.) 3 ‘ பாணன் கொள்ளான்’ திணையும் துறையும் அவை. 1 ஒல்லையூர் கிழான்மகன்பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார் (பி -ம்.) குடவாயினல்லாதனார்) பாடியது. (இ - ள்.) இளைய வீரர் சூடார்; 2வளையணிந்த இளையமகளிர் பறியார்; நல்லயாழ்க்கோட்டின் மெல்லவளைத்துப் பாணன் பறித்துச்சூடிக்கொள்ளான்; பாடினி (பி - ம். பாணிச்சி) சூடாள்;தன்னுடைய ஆண்மைப்பாடு யாவர்க்கும் வெளிப்படவீரரை எதிர்நின்று கொன்று வென்ற வலிய வேலையுடையசாத்தன் இறந்துபட்டபின்பு முல்லையாய நீயும் பூக்கக்கடவையோ,அவனது ஒல்லையூர் நாட்டின்கண்?- எ - று. அவனையிழந்து கொடியேனாய்வாழ்கின்ற யானேயன்றி நீயும் கொடியையாய்ப் பூக்கின்றாயோவெனஎச்சவும்மையாய் நின்றது; என்றது, பூச்சூடி நுகர்வாரின்மையிற்பயனில்லையென்றதாம். (கு - ரை.) 1. புறநா. 64: 2. 4. ஆண்மை, ஆளுந்தன்மையெனப்பொருளுரைத்துஇவ்வடியை மேற்கோள் காட்டினர் நச்சினார்க்கினியர்;தொல். கிளவி. சூ. 57. (242)
1 ஒல்லையூர்: இது கோனாட்டிலுள்ளஒலியமங்கலமென்னும் ஊர். 2 ‘சில்வளை விறலியென்றது, பல்வளையிடுவது பெதும்பைப் பருவத் தாகலின், அஃதன்றிச் சில்வளையிடும் பருவத்தாளென அவள் ஆடல் முதலிய துறைக்குரியளாதல் கூறப்பட்டது’ (பதிற். 57 : 6, உரை) .
|