பக்கம் எண் :

415

திணையும் துறையும் அவை.

ஆயைக் குட்டுவன்கீரனார் பாடியது.

(இ - ள்.) தாளத்திற்கேற்பநடக்கும் அசைந்த நடையையுடைய குதிரைகளும் யானைகளும்தேர்களும் அழியாத புதுவருவாயையுடைய நாடும் ஊர்களும்பாடுவார்க்குக்குறையறக்கொடுக்கும் ஆயாகிய அண்டிரன்கோடேந்திய அல்குலினையும் குறிய கைவளைகளையுமுடையஉரிமை மகளிரோடு காலனென்று சொல்லப்படாநின்றகண்ணோட்ட மில்லாதவன் கொண்டுபோகத்தேவருலகத்தை யடைந்தானாகக் கொண்டு, பொந்தாகியதான் வாழுமிடத்துப் போழ்ந்தாற்போலும் வாயலகையுடையபேராந்தை சுட்டுக்குவியென்று செத்தோரை அழைப்பதுபோலக் கூவும் கள்ளியை யுடைய பாழிடமாகியபுறங்காட்டுள் ஒருபுடையிலே தங்கி ஒள்ளிய தீச்சுடஉடம்பு மாய்ந்துவிட்டது; பொலிவழிந்த கண்ணினையுடையராய்த்தம்மைப் பாதுகாப்போரைக் காணாது ஆரவாரிக்குங்கிளையுடனே செயலற்று அறிவுடையோர் தம் மெய்யுணங்கியபசியையுடையராய்ப் பிறருடைய நாட்டின்கண் தலைப்படும்போக்கையுடையராயினார் இப்பொழுது; இஃதொருநிலை இருந்தவாறு என்னை! - எ - று.

‘மேலோ ருலக மெய்தின னெனவே’எனவும், ‘ஒள்ளெரி நைப்ப வுடம்புமாய்ந் தனனென’எனவும் பாடமோதுவாரும் உளர்.

(கு - ரை.) 5. ‘’கூற்றின்பாற்,கண்மையு முளதெனக் கருதலாகுமோ” (கம்ப. கிளைகண்டு.71)

7. புறநா. 364: 11 - 2.

7-8. ‘’சாவோர்ப் பயிருங் கூகையின்குரலும்” (மணி. 6: 75)

9. பறந்தலை: புறநா. 225, 245; மணி.18: 62

10. ‘’இறந்தெரி நையாமல்” (கலித்.145: 19)

(240)

241

திண்டே ரிரவலர்க் கீத்த தண்டார்
அண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட்
போர்ப் புறு முரசங் கறங்க
5ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே.

திணையும் துறையும் அவை.

1 அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்பாடியது.

(இ - ள்.) திண்ணிய தேரைஇரவலர்க்கு ஈத்த குளிர்ந்தமாலையை யுடைய ஆய்வருகிறானென்று ஒள்ளியதொடியினையும் வச்சிராயுதத்தையுமுடைய விசாலமாகியகையையுடைய இந்திரனதுகோயி


1 ”மோசி பாடிய வாயும்” (புறநா.158 : 13)