‘நட்டோரை யுயர்புகூறினன்' என்றது,1தான் உயர்த்துக்கூறவே யாவரும் உயர்த்துக்கூறுவரென்பதாம். ‘மயக்குடையமொழிவிடுத்தனன்'என்பதற்கு உலகவொழுக்கத்தில்மயக்கமுடைய சொற்கள்தன்னிடைப் புகுதாமல்விடுத்தானென்றும், பொருண்மயங்கியசொற்களைத்தன்னிடத்துப் புகுதாமல் விடுத்தானென்றும்உரைப்பினும்அமையும். ஒன்றோவென்பது எண்ணிடைச்சொல். (கு - ரை.) 3. புறநா. 161: 26- 7. 4- 5. புறநா. 38: 5 - 6; பழ. 398;‘’நட்டவர்குடியுயர்க்குவை,செற்றவ ரரசுபெயர்க்குவை” (மதுரைக்.131 - 2) 6. ‘’பகைவர்க்கஞ்சிப் பணிந்தொழுகலையே” (மதுரைக். 201) 6-7. ‘வலியரென...மீக்கூறலன்:எனத்தன்கண்ணும் பிறன் கண்ணுந் தோன்றிய மென்மைபற்றிஇளிவரல்பிறந்தன’ (தொல். மெய்ப்பாடு. சூ.6, பேர்.;இ. வி. சூ. 578, உரை) 19-21. ‘’கரும்பாட்டிக்கட்டி சிறுகாலைக்கொண்டார், துரும் பெழுந்து வேங்காற்றுயராண் டுழவார்,வருந்தி யுடம்பின் பயன்கொண்டார்கூற்றம்,வருங்காற் பரிவ திலர்” (நாலடி. 35) மு.ஈற்றயலடி நாற்சீரான் வந்தவஞ்சிப்பாவிற்கும் (தொல். செய். சூ. 67, இளம்.) ,பிரிந்திசைத்தூங்கற்குறளடிவஞ்சிப்பாவிற்கும் (யா.வி. சூ. 37) மேற்கோள். (239) 240 | ஆடுநடைப் புரவியங் களிறுந் தேரும் வாடா யாணர் நாடு மூரும் பாடுநர்க் கருகா வாஅ யண்டிரன் கோடேந் தல்குற் குறுந்தொடி மகளிரொடு | | 5 | கால னென்னுங் கண்ணிலி யுய்ப்ப மேலோ ருலக மெய்தின னெனாஅப் பொத்த வறையுட் போழ்வாய்க் கூகை சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும் கள்ளியம் பறந்தலை யொருசிறை யல்கி | | 10 | ஒள்ளெரி நைப்ப வுடம்பு மாய்ந்தது புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர் வாடிய பசிய ராகிப்பிறர் நாடுபடு செலவின ராயின ரினியே. |
1 "மாகஞ்சிறுகக் குவித்துநிதிக்குவை, ஈகையி னேக்கழுத்தமிக்குடைய - மாகொல்,பகைமுகத்த வென்வேலான் பார்வையிற்றீட்டும்,நகைமுகத்த நன்கு மதிப்பு" (நீதிநெறி. 39)
|