பக்கம் எண் :

413

பெயர்படைபுறங்கண்டனன்
கடும்பரிய மாக்கடவினன்
நெடுந்தெருவிற்றேர்வழங்கினன்
15ஓங்கியலகளிறூர்ந்தனன்
தீஞ்செறி தசும்புதொலைச்சினன்
பாணுவப்பப்பசிதீர்த்தனன்
மயக்குடைய மொழிவிடுத்தனன்,ஆங்குச்
செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
20இடுகவொன்றோ சுடுக வொன்றோ
படுவழிப் படுகவிப்புகழ்வெய்யோன் றலையே.

(பி - ம்.) 3 ‘நறைகமழ் சாந்தநீவினன்' 4 ‘வழிதேய்த்தனன்' 6 ‘வாய்மொழியலன்' 7 - 8 ‘மேற்செல்லலன்பிறரையொன்றிரப்பு' 11 'கழறினன்' 12 ‘பொருபடை' 14 ‘றேர்மறுங்கினன்', ‘றேரோட்டினன்'15‘உடல்சினத்தகளிறு' 16 ‘தீஞ்சொற்றசும்பு' 21 ‘படுகுழிப்'

திணையும் துறையும் அவை.

நம்பிநெடுஞ்செழியனைப்பேரெயின்முறுவலார்பாடியது.

(பி - ம்.) இளையமகளிரது வளையணிந்ததோளை முயங்கினான்; காவலையுடையஇளமரக்காக்களிற்பூவைச்சூடினான்; குளிர்ந்த மணநாறும்சாந்தைப் பூசினான்;பகைத்தோரைக் கிளையொடுங்கெடுத்தான்; நட்டோரைமிகுத்துக் கூறினான்; இவர்நம்மில் வலியரென்றுகருதி அவர்க்கு வழிபாடு கூறியறியான்;இவர் நம்மில்எளியரென்று கருதி அவரின் மிகுத்துக்சொல்லியறியான்;பிறரைத் தான் ஒன்றீயெனச் சொல்லிஇரந்தறியான்;சூழ்ந்துநின்று இரந்தோருக்கு யாதும்இல்லையென்றுமறுத்தலை அறியான்; அரசருடைய அவைக்களத்தின்கண்தனது உயர்ந்த புகழை வெளிப்படுத்தினன்; தன்மேல்வரும்படையைத் தன் எல்லையுட் புகுதாமல் எதிர்நின்றுதடுத்தான்; புறக்கொடுத்துப் பெயரப்பட்ட படையினதுபுறக்கொடைகண்டுஅதன்பின் செல்லாது நின்றான்;விரைந்த செலவையுடையகுதிரையைத் தன் மனத்தினும்விரையச் செலுத்தினான்; நெடியவீதியின்கண் தேரைச்சூழ இயக்கினான்: உயர்ந்தஇயல்பையுடையவாகியகளிற்றைச் செலுத்தினான்; இனியசெறிவையுடைத்தாகியமதுவையுடைய குடங்களைப் பலர்க்கும்வழங்கித் தொலைவித்தான்;பாணர் உவப்ப அவர் பசியை மாற்றினான்;நடுவுநிலைமையின்மயக்குதலையுடைய சொற்களை அந்நடுவுநிலைமையிற்பிழையாதபடிமயக்கந்தீரக் கூறினான்; அப்படிச் செய்யத்தகுவனவெல்லாம்செய்தானாதலான்,இப்புகழை விரும்புவோனது தலையைவாளான் அறுத்துப்போகடினும் போகடுக; அன்றிச்சுடினும் சுடுக; பட்டபடி படுக-எ - று.